இஃப்தார் மதநல்லிணக்க விழா
மும்பை புறநகர் தி.மு.க. பிவாண்டி கிளை சார்பாக நடைபெற்றது
மும்பை புறநகர் தி.மு.க. பிவாண்டி கிளை சார்பாக சார்பாக இஃப்தார் மதநல்லிணக்க விழா பிவாண்டி, மில்லத் நகரில் நடைபெற்றது. மும்பை புறநகர் தி.மு.க. செயலாளர் அலிசேக் மீரான் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மும்பை மாநில தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ந. வசந்தகுமார் வரவேற்புரையாற்ற, பிவாண்டி மாநகராட்சி முன்னாள் துணை மேயர் இம்ரான்வலி முகம்மது, நகர் மன்ற முன்னாள் உறுப்பினர்கள் நசீம் கான், துபெல் ஃபாரூக்கி, மோகன் மச்சா, நரேந்திர ஜெயின், ஃபாரூக், காவல் துறை அதிகாரி ராஜேஷ் தல்வி, மும்பை புறநகர் தி.மு.க. துணைச் செயலாளர்கள் பேராசிரியர் சமீரா மீரான், முனைவர் வதிலை பிரதாபன், இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் வ.இரா. தமிழ்நேசன், தலைவர் வே. சதானந்தன் துணை அமைப்பாளர் வெ. அ. ஜெயினுல் ஆபிதீன் உள்ளிட்டோர் உரையாற்றினார்கள்.பிவாண்டி கிளைச் செயலாள மெஹ்பூப் பாட்சா சேக் நன்றியுரையாற்றினார்.
இளைஞரணி துணை அமைப்பாளர் இரா. கணேசன், மும்பை தி.மு.க. முன்னாள் பொருளாளர் எஸ்.பி.செழியன், கிளைக்கழக நிர்வாகிகள் வீரை சோ. பாபு, பொ. அ. இளங்கோ, கு. மாரியப்பன், ஆ. பாலமுருகன், முகமதலி, முஸ்தாக் அலி, பிவாண்டி தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் பேராசிரியர் சம்பத், முலுண்ட் தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் பால. உதயகுமார், ஜாபிர் பாய், ஹமீது, செந்தில்குமார், ஹசன் பாய், டேவிட், யாகூப் உள்ளிட்ட கழகத் தோழர்கள் மற்றும் பொது மக்கள் பலர் திரளாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.