மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு ஓவியக் கண்காட்சி சயான் குருநானக் பள்ளியில் 27 - 11 - 2009 முதல் 29 - 11 - 09 வரை நடைபெற்றது. தமிழினப் போராளி மு. அந்தாலனார், முனைவர் அக்னிபுத்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இம்மூன்று நாள் நிகழ்சிகளிலும் மும்பை புறநகர் தி. மு. க. நிர்வாகிகளும், கிளைக் கழக நிர்வாகிகளும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
நிறைவு நாளன்று நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு தி. மு. க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் அலிசேக் மீரான் தலைமை தாங்கினார்.
நிறைவு விழா நிகழ்ச்சிக்கு மும்பை புறநகர் தி. மு. க. செயலாளர் பொ. அப்பாதுரை தலைமை தாங்கினார். தொடக்க விழா நிகழ்ச்சியில் இலக்கிய அணி செயலாளர் கொ. வள்ளுவன் வாழ்த்துரை வழங்கினார்.
மும்பை புறநகர் தி. மு. க. துணைச் செயலாளரும் எழுத்தாளர் மன்றத் தலைவருமான பேராசிரியர் சமீரா மீரான் மன்ற நிர்வாகிகளுடன் இணைந்து மிகச் சிறப்பாக நிகழ்சிகளை ஏற்பாடு செய்திருந்தார்.