அண்ணா நினைவுநாள் கூட்டம்
மும்பை புறநகர் திமுக சார்பாக பேரறிஞர் அண்ணா நினைவுநாள் கூட்டம் 2010 ,௦௦
பிப் 3, புதன் கிழமை மாலை 7 மணியளவில் ஜெரிமேரி கிளைக் கழக அலுவலகமான கலைஞர் மாளிகையில் நடைபெற்றது. மும்பை புறநகர் திமுக செயலாளர் பொ. அப்பாதுரை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அலிசேக் மீரான் அனைவரையும் வரவேற்று பேசும்போது அண்ணாவை நினைவு கூர்ந்து பல செய்திகளை கூறினார். செயலாளர் அப்பாதுரை தலைமை யுரையில் அண்ணாவின் பண்பு நலன், அறிவாற்றல் குறித்து பேசினார். மும்பை புறநகர் திமுக துணை செயலாளர் பேராசிரியர் சமீரா மீரான், இலக்கிய அணி செயலாளர் கோ. வள்ளுவன் உட்பட புறநகர் திமுக கிளைக்கழக நிர்வாகிகள் பலர் நினைவுரை ஆற்றினார்கள். இக்கூட்டத்தில் சீத்தாகேம்ப் பி. எஸ். ராமலிங்கம், நாராயணன், செம்பூர் கிருஷ்ணன், கல்யாண் வதிலைபிரதாபன், சதானந்தன், ஜீவானந்தன், ஜெரிமேரி கே. ராமசாமி, கவிஞர் தமிழ்நேசன், வின்சென்ட் பால், சயான் வளர்மணி, டோம்பிவலி வீரை சோ. பாபு, காட்கோபர் சஹாபுதீன், அம்பர்நாத் கதிர்வேல், தானா தனுஷ்கோடி, முலுண்ட் அல்லாபிச்சை, காஞ்சூர்மார்க் ஜெயகுமார், ஜோகேஸ்வரி டிம்லேசன், செய்யதலி, கே. பொன்னுசாமி, ச. முருகன், பவுல்ராஜ் உட்பட தி. மு. கழகத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
படத்தில்:மும்பை புறநகர் திமுக சார்பாக நடைபெற்ற பேரறிஞர் அண்ணா நினைவுநாள் கூட்டத்தில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அலிசேக் மீரான், மும்பை புறநகர் திமுக செயலாளர் அப்பாதுரை, மும்பை புறநகர் திமுக துணை செயலாளர் பேராசிரியர் சமீரா மீரான், இலக்கிய அணி செயலாளர் கோ. வள்ளுவன் ஆகியோருடன் புறநகர் திமுக கிளைக்கழக நிர்வாகிகள்