Monday, March 15, 2010

தளபதி மு. க. ஸ்டாலின் நூல் அறிமுக விழா

மும்பை புறநகர் திமுக சார்பில்
தளபதி மு. க. ஸ்டாலின் நூல் அறிமுக விழா

மும்பை புறநகர் திமுக சார்பாக தமிழ்நாடு துணை முதலமைச்சரும் திமுக பொருளாளருமான தளபதி மு. க. ஸ்டாலின் அவர்களின்  பிறந்த நாள் விழாவும் எழுத்தாளர் சோலை எழுதிய 'மூத்த பத்திரிக்கையாளர் பார்வையில் ஸ்டாலின்' என்ற நூலின் அறிமுக விழாவும் 2010, மார்ச்14 , ஞாயிறு மாலை 7 மணியளவில் சீத்தாகாம்பில் உள்ள திமுக கிளைக் கழக அலுவலகமான தளபதி மு, க. ஸ்டாலின் மாளிகையில் நடைபெற்றது . மும்பைப் புறநகர் திமுக செயலாளர் பொ. அப்பாதுரை தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் அலிசேக் மீரான் நூலை வெளியிட தமிழர் நட்புறவுப் பேரவைப் புரவலர் டி. கே. சந்திரன் பெற்றுக்கொண்டார். சீதாகேம்ப் திமுக செயலாளர் பி எஸ். இராமலிங்கம் வரவற்புரையாற்ற புறநகர் திமுக துணைச் செயலாளர் பேராசிரியர் சமீரா மீரான், புறநகர் திமுக இலக்கிய அணிச் செயலாளர் கொ. வள்ளுவன், கல்யாண் திமுக செயலாளர் வதிலை பிரதாபன், தமிழர் நட்புறவு பேரவைத் தலைவர் கவிஞர் குணா, ஆரே காலணி  திமுக செயலாளர் கு. தர்மலிங்கம், மனித உரிமை இயக்கத் தலைவர் மணி, ஜே அண்ணாதுரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

செம்பூர் திமுக பொருளளர் துரை. கிருஷ்ணன், செம்பூர் திமுக செயலாளர் பி. கிருஷ்ணன், செ. அப்பாதுரை, டோம்பிவலி திமுக செயலாளர் வீரை சோ. பாபு, கல்யாண் மகேசன், ஜோகேஷ்வரி திமுக செயலாளர் டிம்லஸ், சுந்தர், அம்பர்நாத் திமுக செயலாளர் அண்ணா கதிர்வேல்,காட்கோபர் திமுக செயலாளர் ஷேக் சஹாபுதீன்,சீதாகேம்ப் ப. உதயகுமார், இராமன், என். திருப்பதி, எம். முருகன், கொளஞ்சியப்பன், ச.அரசன் உட்பட பலர் நூல் படிகளை பெற்றுகொண்டார்கள்.
இறுதியாக சீத்தா கேம்ப் திமுக அவைத்தலைவர் இல நாராயணன் நன்றி கூறினார்.

படத்தில் : மும்பை புறநகர் திமுக சார்பாக சீத்தாகாம்பில் நடைபெற்ற தளபதி மு. க. ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழாவில் எழுத்தாளர் சோலை எழுதிய 'மூத்த பத்திரிக்கையாளர் பார்வையில் ஸ்டாலின்' என்ற நூலை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அலிசேக் மீரான் வெளியிட தமிழர் நட்புறவு பேரவை புரவலர் டி. கே. சந்திரன் பெற்றுக்கொண்டார். உடன் மும்பை புறநகர் திமுக செயலாளர் பொ. அப்பாதுரை புறநகர் திமுக துணை செயலாளர் பேராசிரியர் சமீரா மீரான், புறநகர் திமுக இலக்கிய அணி செயலாளர் கொ. வள்ளுவன், செம்பூர் திமுக செயலாளர் பி. கிருஷ்ணன், தமிழர் நட்புறவு பேரவை தலைவர் கவிஞர் குணா, சீதாகேம்ப் திமுக செயலாளர் பி எஸ். இராமலிங்கம்