மும்பை புறநகர் திமுக சார்பாக
பேரறிஞர் அண்ணா நினைவுநாள் கூட்டம்
செம்பூரில் வெள்ளிகிழமை நடைபெற்றது
பேரறிஞர் அண்ணாவின் 43 ஆவது நினைவுநாள் கூட்டம் மும்பை புறநகர் திமுக சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை (பிப் 3), மாலை 7மணியளவில் செம்பூர் திலக்நகர், சஹாக்கர் திரை அரங்கின் அருகில் மகாராஷ்டிரா வர்த்தக் மண்டல் வித்யா மந்திர் பள்ளியில் நடைபெற்றது . இக்கூட்டத்திற்கு மும்பை புறநகர் திமுக அவைத்தலைவர் கொ. வள்ளுவன் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் பேராசிரியர் சமீரா மீரான் அண்ணா நினைவு சிறப்புரை ஆற்றினார். செம்பூர் கிளை செயலாளர் கவிஞர் குணா தொடக்கவுரை நிகழ்த்தினார். பேரறிஞர் அண்ணா நினைவுநாள் கூட்டம்
செம்பூரில் வெள்ளிகிழமை நடைபெற்றது
பொருளாளர் பி. கிருஷ்ணன் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்தை திறந்துவைத்து உரையாற்றினார். கவிஞர் நம்பிராசன் அண்ணா நினைவுக் கவிதை படித்தார். புறநகர் திமுக துணைச் செயலாளர் வதிலை பிரதாபன்,கவிஞர் வ. இரா. தமிழ்நேசன், அ. இரவிசந்திரன்,, வீரை. சோ. பாபு, ஆறுமுகபாண்டியன், முலுண்ட் சுப்பிரமணி, பி. எஸ். இராமலிங்கம், வளர்மணி, காரை ராவீந்திரன், ப. உதயகுமார், ஆழ்வார், தேவராஜன், பெர்லின் உட்பட பலர் பேரறிஞர் அண்ணா குறித்து நினைவுரை நிகழ்த்தினர். கிளைக்கழக நிர்வாகிகள் ,டி. கிருஷ்ணன், நம்பி, ஜான் தாமஸ், முத்துமாணிக்கம், குமார், ரவி, உட்பட பலர் முன்னிலை வகித்தனர். கூட்ட ஏற்பாடுகளை செம்பூர் கிளை திமுகவினர் சிறப்பாக செய்திருந்தனர்.