மும்பை புறநகர் திமுக சார்பாக
கழகத் தலைவர் கலைஞரின் 95 ஆவது பிறந்தநாள் விழா
மும்பை புறநகர் பகுதியான தானேவில் சிறப்பாக நடைபெற்றது
அலிசேக் மீரான் தலைமையில் கந்திலி கரிகாலன் சிறப்புரையாற்றினார்
கழகத். தலைவர் கலைஞர் அவர்களின் 95 ஆவது பிறந்தநாள் விழா மும்பை புறநகர் தி.மு.க. சார்பாக மும்பை புறநகர் பகுதியான தானேவில் நடைபெற்றது.
மும்பை புறநகர் தி.மு.க. செயலாளர் அலிசேக் மீரான் தலைமையில் தானே வாக்ளே எஸ்டேட் அருகில் உள்ள, கிஸான் நகர் 3 தானே மாநகராட்சிப் பள்ளி அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளர் கந்திலி கரிகாலன் சிறப்புரையாற்றினார்.
முலுண்ட் கிளை மேலமைப்புப் பிரதிநிதி ச. சுப்பிரமணியன் வரவேற்புரையாற்ற, மும்பை புறநகர் தி.மு.க. துணைச் செயலாளர் பேராசிரியர் சமீரா மீரான் தொடக்கவுரையாற்றினார். மும்பை புறநகர் தி.மு.க. மேனாள் செயலாளர் பொ. அப்பாதுரை பெரியார் படத்தையும், பொருளாளர் பி. கிருஷ்ணன் அண்ணா படத்தையும் திறந்து வைத்தனர்..
மும்பை புறநகர் தி.மு.க. இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் வ. இரா. தமிழ்நேசன், கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளர் கவிஞர் நெல்லை பைந்தமிழ் ஆகியோர் வாழ்த்துக்கவிதை பாடினர். மும்பை புறநகர் தி.மு.க. துணைச் செயலாளர் முனைவர் வதிலை பிரதாபன், மும்பை மாநில தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ந. வசந்தகுமார், தானே தி.மு.க கே. ஏ. ஜாகிர் உசேன், இலக்கிய அணித் தலைவர் வே. சதானந்தன், இலக்கிய அணி புரவலர் கவிஞர் இரஜகை நிலவன், இரா. மதியழகன், கி. வீரமணி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகினார்கள். நிறைவாக தானே கிளைச் செயலாளர் ஆ. பாலமுருகன் நன்றியுரையாற்றுகிறார்.
இந்நிகழ்ச்சியில் பம்பாய் திருவள்ளுவர் மன்றத் தலைவர் ஜேம்ஸ் தேவதாசன், மும்பை மாநில தி.மு.க. மேனாள் பொருளாளர் எஸ்.பி. செழியன், மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ. கணேசன், பாவலர் பாலையா, ஏ. எஸ். மணி, இ. சுடலைமணி, பிச்சுமணி, ஆ.பாலசுப்பிரமணியன், வெ. அ. சிராஜுதீன், இராமசாமி, தங்கராசு, சின்னதுரை, சுப்பிரமணி, சேகர் முருகன், டி.யு. மணி, சிவா, கண்ணன், ஆறுமுகம், அலெக்ஸாண்டர், வி. சுயம்பு, ஆயிரம், கண்ணன் கவி, அருண் பிரகாஷ், வள்ளியூர் மணி, இரா. செபஸ்டியன், இ. மாடசாமி, தில்லைகுமார், சேர்மன் துரை, எ. அருணாசலம், அப்துல் லத்திப், சுரேஷ் இராமதாஸ், கலியபாபு, கே. மாரியப்பன், சு. பழனி, முருகன், கே. இராமமூர்த்தி, இராஜன், சிவகுமார், எஸ்.அருணாசலம், கொம்பையன், கிட்டு, வெங்கடேசன், மணிகண்டன், மனோஜ் குமார் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
மும்பை புறநகர் தி.மு.க. இலக்கிய அணி பொருளாளர் ப. உதயகுமார், மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ. இரவிச்சந்திரன், இலக்கிய அணி துணை அமைப்பாளர் வெ.அ.ஜெயினுல் ஆபிதீன், டோம்பிவிலி கிளைச் செயலாளர் வீரை சோ. பாபு, ஜெரிமெரி கிளைச் செயலாளர் பொ. அ. இளங்கோ, பாண்டுப் கிளைச் செயலாளர் கு. மாரியப்பன், பிவாண்டி கிளைச் செயலாளர் மெஹ்பூப் பாட்சா சேக், இலக்கிய அணி துணை அமைப்பாளர் தமிழினநேசன், முலுண்ட் கிளைச் செயலாளர் சு. பெருமாள், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் க. மூர்த்தி, முலுண்ட் கிளை இளைஞரணி அமைப்பாளர் பால. உதயகுமார், முகமது அலி, முஸ்தாக் அலி, அண்ணா கதிர்வேல், பேராசிரியர் சம்பத், எம். பரமசிவம், நம்பி, இராமானுசம், ஜாகிர் அசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
பாண்டுப், முலுண்ட், தானே கிளைக்கழக நிர்வாகிகள் ச. சுப்பிரமணியன், பாண்டுப் கு. மாரியப்பன், பாலமுருகன், சு. பெருமாள், பால. உதயகுமார் ஆகியோர் விழா ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.