Sunday, December 20, 2009

பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு

பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு
கலை இலக்கிய போட்டிகள் பரிசளிப்பு விழா .

பொ. அப்பாதுரை, அலிஷேக்மீரான் பங்கேற்பு

மாராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் 10 ம ஆண்டு தொடக்கவிழா, பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு கலை இலக்கிய போட்டிகள் பரிசளிப்பு விழா ஆகிய இருபெரு விழா ௦ 19 . 12 . 2010 , சனிக்கிழமை, முலுண்ட் காளிதாஸ் வளாகத்தில் நடைபெற்றது. மன்ற ஆட்சிக்குழு உறுப்பினர் பா. சங்கரநயினார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மன்ற செயலாளர் அமலா ஸ்டான்லி வரவேற்புரையாற்றினார். மற்றொரு செயலாளர் வதிலை பிரதாபன் ஆண்டறிக்கை படித்தார். தொடர்ந்து மன்றத்தின் சார்பாக நடைபெற்ற பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு கலை இலக்கிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வங்கி அதிகாரிகள் சேதுராமன் சாத்தப்பன், கோ. மலர் அரசன், டாக்டர் ஷண்முக சுந்தரம், கவிஞர் புதிய மாதவி ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள். மும்பை புறநகர் தி. மு. க. செயலாளர் பொ. அப்பாதுரை வெற்றிபெற்ற மாணவர்களை வாழ்த்தி பேசினார்.  திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொது செயலாளர் பேராசிரியர் சுபவீரபாண்டியன் சிறப்புரையாற்றினார். நிறைவாக மும்பைப் புறநகர் தி. மு. க. துணைச் செயலாளரும் மன்றத் தலைவருமான  பேராசிரியர் சமீரா மீரான் நன்றி கூறினார். நிகழ்சிகளை கவிஞர் தமிழ்நேசன் தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தி. மு. க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் அலிஷேக் மீரான்,       கே. வி, அசோக் குமார், எம். ஏ. சூசை, யேசுராஜ் சாமுவேல், கோ. வள்ளுவன், சுந்தரமூர்த்தி, பாவலர் பாலையா, பாவலர் முகவை திருநாதன், உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் தமிழ் அமைப்பு நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள் மேடையில் அமர வைக்கப்பட்டதும், அவர்களை உரையாற்றச் செய்ததும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது மூன்று பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் தமிழ் பேச்சுப் போட்டியில் கோவண்டி இராமலிங்கம் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சோனியா ராசு, எல்லம்மாள், சந்த கக்கையா மாநகர் மன்றத் தமிழ் பள்ளி மாணவி இச்க்கித்தாய் ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். ஆங்கில பேச்சுப்போட்டியில் பி. எஸ். ஐ. ஏ. எஸ். ஆங்கில உயர்நிலைப் பள்ளி மாணவி பாத்மா அப்துல் காதர். கனோசா கான்வன்ட் மாணவி சிவரஞ்சனி கணேசன் ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். பாட்டுப்போட்டியில் பி. எஸ். ஐ. ஏ. எஸ். ஆங்கில உயர்நிலைப் பள்ளி மாணவி சுகன்யா இளங்கோவன், ஆசிரியர் கலாதேவி இரகுநாதன் கம்பன் உயர்நிலைப் பாளி மாணவி ஆறுமுக வடிவு, . ஒப்புவித்தல் போட்டியில் ஆரே காலணி மாநகர் மன்றத் தமிழ் பள்ளி மாணவி பவானிராஜா, கம்பன் உயர்நிலைப் பள்ளி மாணவர் நாகராஜ் சுடலைமணி , தமிழ் கட்டுரை போட்டியில் சந்த கக்கையா மாநகர் மன்றத் தமிழ் பள்ளி மாணவி முத்துலட்சுமி கணேசன், கம்பன் உயர்நிலைப் பள்ளி மாணவி சோனியா சுடலைமணி, எஸ். ஐ. டபிள்யு. எஸ். கல்லூரி மாணவர் வாசு அரிதாஸ் , ஆங்கில கட்டுரை போட்டியில் பி. எஸ். ஐ. ஏ. எஸ். ஆங்கில உயர்நிலைப் பள்ளி மாணவி ஷிபா பாபு கான், தனஸ்ரீ ஜெயவந்த் மோரே ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். மேலும் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் பரிசுகளை வென்றனர். மாணவர்களைத் தேடித் பிடித்து அவர்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பளித்த மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்ற நிர்வாகிகளை அனைவரும் வெகுவாக பாராட்டினார்கள்.

No comments:

Post a Comment