மும்பை புறநகர் திமுக சார்பாக
மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கக் கூட்டம்
ஜெரிமேரியில் நடைபெற்றது
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளுக்கு நன்றியும், மரியாதையும் செலுத்தும் வீர வணக்கக் கூட்டம் மும்பை புறநகர் திமுக ஜெரிமேரி கிளை சார்பாக 25. 01. 10 திங்கள் கிழமை காலை 11 மணியளவில் ஜெரிமேரியில் உள்ள திமுக அலுவலகமான கலைஞர் மாளிகையில் நடைபெற்றது. மூத்த திமுக பிரமுகர் கே,.இராமசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மும்பை புறநகர் திமுக செயலாளர் பொ. அப்பாதுரை வீரவணக்க உரை நிகழ்த்தினார். திமுக பிரமுகர்கள் பொன்னுசாமி, முருகன், லிங்கம், பவுல், ஜெரிமேரி பகுதி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment