Saturday, April 28, 2012

அண்ணா நினைவு கருத்தாய்வு

தமிழ் சிந்தனையாளர் சங்கமம் சார்பாக
அண்ணா நினைவு கருத்தாய்வு
தமிழ் சிந்தனையாளர் சங்கமம் ஒவ்வொரு மதமும்  கருத்தாய்வு அமர்வுகளை நடத்தி வருகிறது. அதன் 15  ஆவது அமர்வில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளை ஒட்டி  அண்ணா குறித்த கருத்தாய்வு நடைபெற்றது. மும்பை திமுக செயலாளர் . மு. பொற்கோ அண்ணா நினைவு சிறப்பு கருத்துரை வழங்கினார். கவிஞர் குணா வரவேற்று பேசினார். கவிஞர் புதியமாதவி, பேராசிரியர் சமீரா மீரான்,கொ.வள்ளுவன், பாவலர் முகவை திருநாதன், காரை ரவீந்திரன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினார்கள்.  தமிழ் சிந்தனையாளர் சங்கம அமைப்பாளர் இராஜா வாய்ஸ், வெ. பாலு, பரணி, கொ. வள்ளுவன், வதிலை பிரதாபன், சங்கர நயினார், பி. கிருஷ்ணன்,செ. அப்பாதுரை,  . பொன்னம்பலம், பி. எஸ். இராமலிங்கம், பா. உதயகுமார், கலியபாபு, சாந்தாராம் சேட், செல்வம், இல. இராஜன், முருகன், பெர்லின் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இறுதியாக . இரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Tuesday, February 7, 2012

பேரறிஞர் அண்ணா நினைவுநாள் கூட்டம்

மும்பை புறநகர் திமுக சார்பாக
பேரறிஞர் அண்ணா நினைவுநாள் கூட்டம்
செம்பூரில் வெள்ளிகிழமை  நடைபெற்றது 
 
பேரறிஞர் அண்ணாவின் 43 ஆவது நினைவுநாள் கூட்டம் மும்பை புறநகர் திமுக சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை (பிப் 3),    மாலை 7மணியளவில் செம்பூர் திலக்நகர், சஹாக்கர் திரை அரங்கின் அருகில்  மகாராஷ்டிரா வர்த்தக் மண்டல் வித்யா மந்திர் பள்ளியில் நடைபெற்றது . இக்கூட்டத்திற்கு மும்பை புறநகர் திமுக அவைத்தலைவர் கொ. வள்ளுவன் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் பேராசிரியர் சமீரா மீரான் அண்ணா நினைவு சிறப்புரை ஆற்றினார். செம்பூர் கிளை செயலாளர் கவிஞர் குணா  தொடக்கவுரை நிகழ்த்தினார்.
பொருளாளர் பி. கிருஷ்ணன் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்  படத்தை  திறந்துவைத்து  உரையாற்றினார்.  கவிஞர் நம்பிராசன் அண்ணா நினைவுக் கவிதை படித்தார். புறநகர் திமுக துணைச் செயலாளர் வதிலை பிரதாபன்,கவிஞர் வ. இரா. தமிழ்நேசன், அ. இரவிசந்திரன்,, வீரை. சோ. பாபு,  ஆறுமுகபாண்டியன்,  முலுண்ட் சுப்பிரமணி,   பி. எஸ். இராமலிங்கம், வளர்மணி, காரை ராவீந்திரன், ப. உதயகுமார், ஆழ்வார், தேவராஜன், பெர்லின்   உட்பட பலர் பேரறிஞர் அண்ணா குறித்து  நினைவுரை நிகழ்த்தினர். கிளைக்கழக நிர்வாகிகள் ,டி. கிருஷ்ணன்,  நம்பி, ஜான் தாமஸ், முத்துமாணிக்கம், குமார்,   ரவி, உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.   கூட்ட ஏற்பாடுகளை செம்பூர் கிளை திமுகவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Wednesday, February 1, 2012

வீரவணக்க நாள் கூட்டம்

மும்பை புறநகர் தி. மு. க. சார்பாக
மொழிப்போர் தியாகிகள் தின
வீரவணக்க நாள் கூட்டம்
செம்பூரில்  நடைபெற்றது
மும்பை புறநகர் தி. மு. க. செம்பூர் கிளை சார்பாக மொழிப்போர் தியாகிகள் தின வீர வணக்க நாள் கூட்டம்  புதன் கிழமை ( ஜன 25 , 2012 ) மாலை 6 மணியளவில் செம்பூர், திலக்நகர், சஹாக்கர் திரையரங்கத்தின் அருகில், ஒன்லி பரோட்டா எதிரில் உள்ள மகாராஷ்டிரா ஐக்கிய வர்த்தக் மண்டல் வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில்
நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மும்பை புறநகர் திமுக துணைச் செயலாளர் பேராசிரியர்  சமீரா மீரான்  தலைமை  தாங்கினார். செம்பூர் திமுக செயலாளர் கவிஞர் குணா தொடக்கவுரை ஆற்ரினார். மும்பை புறநகர் திமுக செயலாளர் பொ. அப்பாதுரை, அவைத்தலைவர் கொ. வள்ளுவன், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் அலிசேக் மீரான், பொருளாளர் பி. கிருஷ்ணன், துணை செயலாளர் வதிலை பிரதாபன், ம. ஜேசுராஜ், கவிஞர் வ. இரா, தமிழ்நேசன், கவிஞர் நம்பிராசன், அ. இரவிச்சந்திரன், ஆறுமுகபாண்டியன், காரை ரவீந்திரன்  உட்பட பலர்  வீரவணக்க உரை நிகழ்த்தினார்கள். கிளைக்கழக நிர்வாகிகள் வீரை சோ. பாபு, பி. எஸ். இராமலிங்கம், ப. உதயகுமார்,  பெர்லின், அண்ணா கதிர்வேல்,  நம்பி, ஜான் தாமஸ், திருமலை நம்பி, கலியமூர்த்தி, தேவராசன், சா. இரவி, ஜான்சன், க. ஆறுமுகம்  உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.