மும்பையில் தளபதி மு. க. ஸ்டாலின்
இதய அறுவை சிகிச்சைக்காக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் திரு டி. ஆர். பாலு அவர்களைக் காண வருகை தந்திருந்த கழகப் பொருளாளர் தளபதி மு. க. ஸ்டாலின் அவர்களை காலையில் விமானநிலையத்திலும், பிறகு விடுதி அறையிலும், மீண்டும் மாலையில் விடுதி அறையிலும் சந்தித்த போது கழகம் குறித்தும் இன்றைய அரசியல் நிலவரம் குறித்தும் தோழர்கள் சொன்ன சில கருத்துகளை அவர் மிகக் கவனமாகக் கேட்டுக் கொண்டார். எந்த கேள்விக்கும் விருப்பமின்மை அவர் முகத்தில் தெரியவே இல்லை.
இடை இடையே திரு டி. ஆர். பாலு அவர்களின் மருத்துவ சிகிச்சை ஏற்பாடுகள் குறித்து விசாரித்துக் கொண்டதோடு, பாலு அவர்களைப் பற்றியும் அவர் அண்மையில் போராட்டத்தில் கலந்து கொண்டு வெகு தூரம் நடந்து வந்தது குறித்தும் செய்திகளைப் பகிர்ந்து கொண்டார். பாலு அவர்கள் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்தோ தாம் வந்துள்ளது குறித்தோ செய்திகளை மும்பை பத்திரிகைகளில் தந்தால் மருத்துவமனையில் பெருங்கூட்டம் கூடி அது மருத்துவ மனைக்கும் மருத்துவர்களுக்கும் இடையூறை ஏற்படுத்தும் என்பதாலும் பாலு அவர்களுக்கும் ஒய்வு மிக மிகத் தேவை என்பதாலும் செய்தியை தவிர்த்து விடுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார். தளபதி கேட்டுக்கொண்டபடி பத்திரிகைகளுக்கு செய்தி தருவதை தவிர்த்துக் கொண்டோம்.
No comments:
Post a Comment