Friday, June 5, 2015

கலைஞர் பிறந்த நாள் விழா

மும்பை புறநகர் தி. மு. க. கிளைக்கழகங்கள் சார்பாக
தலைவர் கலைஞர் அவர்களின் 92 ஆவது பிறந்த நாள் விழா
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 92 ஆவது பிறந்த நாளை மும்பை புறநகர் தி. முக. கிளைக் கழகத்தினர் இனிப்பு வழங்கி மிகச் சிறப்பாகக் கொண்டாடினர்
ஜெரிமெரி கிளை சார்பாக மும்பை புறநகர் தி. மு. க. முன்னாள் செயலாளர் பொ. அப்பாதுரை, இலக்கிய அணிச் செயலாளர் கவிஞர் வ. இரா. தமிழ்நேசன், ஜெரிமெரி கிளைச் செயலாளர் பொ. அ. இளங்கோ உள்ளிட்டோர் அப்பகுதி மக்களுக்கு இனிப்பு வழங்கி தலைவர் கலைஞர் பிறந்த நாளை கொண்டாடினார்கள்
செம்பூர் கிளை சார்பாக மும்பை புறநகர் தி. மு. க. பொருளாளர் பி. கிருஷ்ணன், செம்பூர் கிளைச் செயலாளர் கவிஞர் குணா, இலக்கிய அணிப் பொருளாளர் ப. உதயகுமார், சீத்தாகேம்ப் பொறுப்பாளர் இரா. முனுசாமி, பெ. ஆழ்வார், பெர்லின், கலியபாபு, கோவண்டி அம்பேத் உள்ளிட்டோர் செம்பூர் பகுதியில் இனிப்பு வழங்கி தலைவர் கலைஞர் பிறந்த நாளை கொண்டாடினர்
தலைவர் கலைஞர் அவர்களின் 92ஆவது
பிறந்தநாளை முன்னிட்டு மும்பை புறநகர் தி.மு.க சார்பாக
மாணவர்களுக்கு குறிப்பேடுகள் வழங்கப்பட்டன. .
முலுண்ட் வித்யா மந்திர் பள்ளியில் மும்பை புறநகர் தி.மு.க துணைச் செயலாளர் பேராசிரியர் சமீரா மீரான் தலைமையில்
நடைபெற்ற இந்நிகழ்ச்சியில். மும்பை புறநகர் மாநில தி.மு.க துணைச் செயலாளர் வதிலை பிரதாபன், இலக்கிய அணிச் செயலாளர்
கவிஞர் வ. இரா. தமிழ்நேசன், பாண்டுப் மாரியப்பன்,
தானே பாலமுருகன், முலுண்ட் பகுதியை சேர்ந்த இராஜேந்திரன், குமரன், தமிழ் மாணவ, மாணவியர் உள்ளிட்ட பல தமிழன்பர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட
மாணவ, மாணவியருக்கு இலவச
குறிப்பேடுகளும் இனிப்பும்
வழங்கப்பட்டன..










No comments:

Post a Comment