சமீரா மீரான், தமிழ் நேசனுக்கு பாராட்டு விழா
தி.மு.க. தலைமை இலக்கிய அணியின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மும்பை புறநகர் தி.மு.க. துணைச் செயலாளர் பேராசிரியர் சமீரா மீரான் மற்றும் அயலக தமிழறிஞர் விருந்து பெற்ற இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் தமிழ் நேசன் ஆகிய இருவருக்கும் ஜெரிமெரி தமிழ்ச் சங்கத்தின் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. மும்பை புறநகர் தி.மு.க. முன்னாள் செயலாளர் பொ. அப்பாதுரை தலைமையில் நடைபெற்ற இப்பாராட்டு விழாவில் மும்பை புறநகர் தி.மு.க. செயலாளர் அலிசேக் மீரான், துணைச் செயலாளர் முனைவர் வதிலை பிரதாபன், இளைஞரணி மாநில அமைப்பாளர் ந. வசந்தகுமார், இலக்கிய அணித் தலைவர் வே. சதானந்தன், சங்க முன்னாள் தலைவர் பொ. வெங்கடாசலம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். ஜெரிமெரி தமிழ்ச் சங்க நிர்வாகிகள் கோ. சீனிவாசகம், அய்யாபிள்ளை உள்ளிட்டோர் மிகச்சிறப்பாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்