Sunday, March 18, 2018

விருது பெற்ற நிர்வாகிகளுக்குப் பாராட்டு விழா


மும்பை புறநகர் தி.மு.க. சார்பாக
விருது பெற்ற நிர்வாகிகளுக்குப் பாராட்டு விழா
முலுண்டில் நடைபெற்றது


தி.மு.கழகத்தின் உயரிய விருதான பெரியார் விருதும், மகாராட்டிரா, சத்ரபதி சிவாஜி மக்கள் கலைக் கழகத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்ற மும்பை புறநகர் தி.மு.க.மேனாள் செயலாளர் பொ. அப்பாதுரை, தி.மு.கழகத்தின் தலைமை இலக்கிய அணி சென்னை அன்பகத்தில் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மும்பை புறநகர் தி.மு.க. துணைச் செயலாளர் பேராசிரியர் சமீரா மீரான், அயலக தமிழறிஞர் விருது பெற்ற புறநகர் தி.மு.க. இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் வ. இரா. தமிழ்நேசன் ஆகியோருக்கு மும்பை புறநகர் தி,மு.க. சார்பாக பாராட்டு விழா முலுண்டில் நடைபெற்றது. இப்பாராட்டு விழா  மும்பை புறநகர் தி.மு.க. செயலாளர் அலிசேக் மீரான் தலைமையில்  முலுண்ட் மேற்கில் உள்ள முலுண்ட் சிந்தி சபா அரங்கில் நடைபெற்றது.

புறநகர் தி.மு.க. துணைச் செயலாளர் முனைவர் வதிலை பிரதாபன் வரவேற்புரையாற்ற, மாநில தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ந. வசந்தகுமார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். விருதாளர்கள் சார்பாக பொ. அப்பாதுரை ஏற்புரை வழங்கினார். பாண்டுப் கிளைச் செயலாளர் கு. மாரியப்பன் நன்றியுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மராத்திய மாநிலத் தமிழ்ச் சங்கத் தலைவர் சிவ. அண்ணாமலை பங்கேற்று விருதாளர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
தெட்சணமாற நாடார் சங்கச் செயலாளர் எம். காசிலிங்கம், பம்பாய் திருவள்ளுவர் மன்றத் தலைவர் ஜேம்ஸ் தேவதாசன், ஜெரிமெரி தமிழ்ச் சங்கத் தலைவர் கோ. சீனிவாசகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாராவி செயலாளர் ஞான. அய்யாபிள்ளை, மும்பைத் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் மிக்கேல் அந்தோணி, மலாட் தமிழர் நலச் சங்கத் தலைவர் இல. பாஸ்கரன், வாசி திமுக எஸ். பழநி, தலைமையாசிரியர் திருமதி பொற்செல்வி. மும்பை டி. எம். எஸ். எம். என். நரசிம்மன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
மும்பை புறநகர் தி.மு.க. பொருளாளர் பி. கிருஷ்ணன், வசாய் ரோடு தமிழ்ச் சங்க மேனாள் செயலாளர் அ. இராசமாணிக்கம், யாதவர் மகாசபை தலைவர் இ. இலட்சுமணன்,  இந்தியப் பேனாநண்பர் பேரவைத் தலைவர் மா. கருண், திராவிடர் கழகத் தலைவர் பெ. கணேசன், மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர்  அ. இரவிச்சந்திரன், தி.மு.க. இலக்கிய அணி தலைவர் வே. சதானந்தன்,  பொருளாளர் ப. உதயகுமார், புரவலர் கவிஞர் இரஜகை நிலவன், துணை அமைப்பாளர் வெ.அ.ஜெயினுல் ஆபிதீன்,   முலுண்ட் கிளை திமுக பிரதிநிதி ச. சுப்பிரமணியன், மால்வானி திமுக அமைப்பாளர் எஸ். பி. செழியன், தாராவி தி.மு.க. முன்னாள் செயலாளர் என்.வி. சண்முகராசன்,  தானே திமுக ஜாகிர் உசேன்,  திமுக பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளர் பாவலர் நெல்லை பைந்தமிழ், இளைஞரணி துணை அமைப்பாளர் மூர்த்தி, டோம்பிவிலி கிளைச் செயலாளர் வீரை. சோ. பாபு, பிவாண்டி கிளைச் செயலாளர் மெஹ்பூப் பாட்சா சேக், பொய்சர் கிளைச் செயலாளர் மாரியப்பன், செம்பூர் கிளை எம். பரமசிவம்  உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

இலக்கிய அணி புரவலர் சோ. பா. குமரேசன், துணை அமைப்பாளர் தமிழினநேசன், சுப. மணிமாறன்,  இளைஞரணி துணை அமைப்பாளர் இரா. கணேசன், சீத்தாகேம்ப் பொறுப்பாளர் இரா. முனுசாமி, பெ. ஆழ்வார், சயான் கிளைச் செயலாளர் நா. வளர்மணி,  பிவாண்டி கிளைத் தலைவர் முகமதலி, பொருளாளர் முஸ்தாக் அலி, பிவாண்டி இளைஞரணி அமைப்பாளர் பேராசிரியர் சு. சம்பத். துணை அமைப்பாளர் சு. தமிழரசு, ஜாகிர் அசன், கலையரசன்,  ஜெரிமெரி கிளைச் செயலாளர் பொ. அ. இளங்கோ, தாராவி க. இராசன், தானா கிளைச் செயலாளர் பால முருகன், தானே எம்.எம்.ஏ. காதர்,  பொய்சர் சதாசிவன், செல்வராஜ்,   முலுண்ட் கிளைச் செயலாளர் சு. பெருமாள், அந்தோணி ஜேம்ஸ், துணைச் செயலாளர்கள் மா. சக்திவேல், இ. மாடசாமி, முலுண்ட் இளைஞரணி  அமைப்பாளர் பால. உதய குமார், அபதுல் லத்தீப்,   பாண்டுப் கிளை, பி. மாடசாமி, முத்துகிருஷ்ணன், மதியழகன், வள்ளியூர் மணி, திவா வேல்முருகன், செம்பூர் நம்பி, வாசி ஆறுமுகம், வாசி தில்லை, டோம்பிவிலி வேலையா, ஜோகேஷ்வரி சுந்தர், யூசும் சேக்  

உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ந. வசந்தகுமார், ச. சுப்பிரமணியன், கு. மாரியப்பன், சு. பெருமாள், ஆ. பாலமுருகன், பால. உதயகுமார் உள்ளிட்ட விழா குழுவினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.


Thursday, March 1, 2018

இளைஞர் எழுச்சி நாள்

முலுண்ட் தி.மு.க இளைஞரணி சார்பாக இளைஞர் எழுச்சி நாள் 

மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மும்பை புறநகர் முலுண்ட் கிளை தி.மு.க இளைஞரணி சார்பாக தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக முலுண்ட் மேற்கு, வித்யா மந்திர் பள்ளியில் மும்பை புறநகர் தி.மு.க.முன்னாள் செயலாளர் பொ. அப்பாதுரை தலைமையில் நடைபெற்றது. மாநில தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ந. வசந்தகுமார் வரவேற்புரையாற்ற, புறநகர் தி.மு.க. துணைச் செயலாளர் பேராசிரியர் சமீரா மீரான் தொடக்கவுரையாற்றினார். புறநகர் தி.மு.க. பொருளாளர் பி.கிருஷ்ணன், பம்பாய் திருவள்ளுவர் மன்றத் தலைவர் ஜேம்ஸ் தேவதாசன், இளைஞரணி துணை அமைப்பாளர் இரா. கணேசன், வாசி எஸ். பழனி,  கிளைச் செயலாளர்கள் இரா. முனுசாமி, சு.பெருமாள், முத்துகிருஷ்ணன், பேலஸ் துரை, மதியழகன், மாடசாமி உள்ளிட்ட கிளைக்கழக நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்

முலுண்ட் ச. சுப்பிரமணியன் பிறந்தநாள் கேக்கை வெட்டி வாழ்த்துரை வழங்கினார். நல உதவியாக பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டன.
அண்மையில் காலமான உச்ச நீதிமன்ற மேனாள் நீதியரசர் இரத்தினவேல் பாண்டியன், கோரேகாவ் கிளை திமுக அவைத்தலைவர் வி.எம். சுவாமி அவர்களின் மகன் விமல்குமார் ஆகியோருக்கு நிகழ்ச்சியில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
புறநகர் தி.மு.க. துணைச் செயலாளர் முனைவர் வதிலை பிரதாபன், இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் வ.இரா. தமிழ்நேசன், இந்திய பேனா நண்பர் பேரவைத் தலைவர் மா. கருண், இலக்கிய அணி  புரவலர் கவிஞர் இரஜகை நிலவன், பொருளாளர் ப. உதயகுமார், தமிழின இரயில் பயணிகள் சங்கச் செயலாளர் தி. அப்பாதுரை, முலுண்ட் பால சுப்பிரமணியன், கிளைச் செயலாளர்கள் வீரை சோ. பாபு,  மெஹ்பூப் பாட்சா சேக், கு.மாரியப்பன், ஆ. பாலமுருகன், பொ. அ. இளங்கோ, செம்பூர் எம்.பி. சிவம், பிவாண்டி இளைஞரணி துணை அமைப்பாளர் சு. தமிழரசன், முலுண்ட் இளைஞரணி அமைப்பாளர் பால. உதயகுமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
கிளைக்கழக நிர்வாகிகள் செபாஸ்டின், சேர்மன் துரை, வாசி ஆறுமுகம், தில்லை, முத்து கிருஷ்ணன், ஜாகிர் அசன், மா. சக்திவேல், அஜித் குமார், செந்தில் குமார், பிரசாந்த், வள்ளியூர் மணி, இராஜா, பிரபாகரன், இசக்கிவேணு, முருகன், பிரகாஷ், இசக்கியம்மாள், ருக்மணி, நஹிமா, பானு, அப்துல் லத்தீப், கார்த்திகேயன் முத்து, இசக்கி முத்து, மா. முருகன், வண்டி மலையான் உள்ளிட்ட திமுகவினர் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிகளை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஜெயினுல் ஆபிதீன் தொகுத்து வழங்கினார்  இளைஞரணி மாநில துணை அமைப்பாளர்  இரா. கணேசன் நன்றியுரையாற்றினார்.