Thursday, March 1, 2018

இளைஞர் எழுச்சி நாள்

முலுண்ட் தி.மு.க இளைஞரணி சார்பாக இளைஞர் எழுச்சி நாள் 

மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மும்பை புறநகர் முலுண்ட் கிளை தி.மு.க இளைஞரணி சார்பாக தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக முலுண்ட் மேற்கு, வித்யா மந்திர் பள்ளியில் மும்பை புறநகர் தி.மு.க.முன்னாள் செயலாளர் பொ. அப்பாதுரை தலைமையில் நடைபெற்றது. மாநில தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ந. வசந்தகுமார் வரவேற்புரையாற்ற, புறநகர் தி.மு.க. துணைச் செயலாளர் பேராசிரியர் சமீரா மீரான் தொடக்கவுரையாற்றினார். புறநகர் தி.மு.க. பொருளாளர் பி.கிருஷ்ணன், பம்பாய் திருவள்ளுவர் மன்றத் தலைவர் ஜேம்ஸ் தேவதாசன், இளைஞரணி துணை அமைப்பாளர் இரா. கணேசன், வாசி எஸ். பழனி,  கிளைச் செயலாளர்கள் இரா. முனுசாமி, சு.பெருமாள், முத்துகிருஷ்ணன், பேலஸ் துரை, மதியழகன், மாடசாமி உள்ளிட்ட கிளைக்கழக நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்

முலுண்ட் ச. சுப்பிரமணியன் பிறந்தநாள் கேக்கை வெட்டி வாழ்த்துரை வழங்கினார். நல உதவியாக பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டன.
அண்மையில் காலமான உச்ச நீதிமன்ற மேனாள் நீதியரசர் இரத்தினவேல் பாண்டியன், கோரேகாவ் கிளை திமுக அவைத்தலைவர் வி.எம். சுவாமி அவர்களின் மகன் விமல்குமார் ஆகியோருக்கு நிகழ்ச்சியில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
புறநகர் தி.மு.க. துணைச் செயலாளர் முனைவர் வதிலை பிரதாபன், இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் வ.இரா. தமிழ்நேசன், இந்திய பேனா நண்பர் பேரவைத் தலைவர் மா. கருண், இலக்கிய அணி  புரவலர் கவிஞர் இரஜகை நிலவன், பொருளாளர் ப. உதயகுமார், தமிழின இரயில் பயணிகள் சங்கச் செயலாளர் தி. அப்பாதுரை, முலுண்ட் பால சுப்பிரமணியன், கிளைச் செயலாளர்கள் வீரை சோ. பாபு,  மெஹ்பூப் பாட்சா சேக், கு.மாரியப்பன், ஆ. பாலமுருகன், பொ. அ. இளங்கோ, செம்பூர் எம்.பி. சிவம், பிவாண்டி இளைஞரணி துணை அமைப்பாளர் சு. தமிழரசன், முலுண்ட் இளைஞரணி அமைப்பாளர் பால. உதயகுமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
கிளைக்கழக நிர்வாகிகள் செபாஸ்டின், சேர்மன் துரை, வாசி ஆறுமுகம், தில்லை, முத்து கிருஷ்ணன், ஜாகிர் அசன், மா. சக்திவேல், அஜித் குமார், செந்தில் குமார், பிரசாந்த், வள்ளியூர் மணி, இராஜா, பிரபாகரன், இசக்கிவேணு, முருகன், பிரகாஷ், இசக்கியம்மாள், ருக்மணி, நஹிமா, பானு, அப்துல் லத்தீப், கார்த்திகேயன் முத்து, இசக்கி முத்து, மா. முருகன், வண்டி மலையான் உள்ளிட்ட திமுகவினர் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிகளை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஜெயினுல் ஆபிதீன் தொகுத்து வழங்கினார்  இளைஞரணி மாநில துணை அமைப்பாளர்  இரா. கணேசன் நன்றியுரையாற்றினார்.

No comments:

Post a Comment