Sunday, March 29, 2009

மும்பை தமிழ் அமைப்புகள் சார்பாக பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாக்கள்

கோரேகான் தமிழ்ச்சங்கம் சார்பாக
பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா
மும்பை மேற்கு பகுதியில் உள்ள கோரேகானில் உள்ள கோரேகான் தமிழ்ச்சங்கத்தின்  சார்பாக பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ் இலெமுரியா மாத இதழின் முதன்மை ஆசிரியர் சு. குமணராசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 'அரசியலுக்கு அப்பால் அறிஞர் அண்ணா' என்ற தலைப்பில் உரையாற்றினார். மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்ற துணைசெயலாளரும் மும்பை பகுத்தறிவாளர் கழக அமைப்பாளருமான அ. இரவிச்சந்திரன், கோரேகான் தமிழ்ச சங்க நிர்வாகிகள் இராமச்சந்திரன், பாலகிருஷ்ணன், மணி, கே. ஆர். சீனிவாசன், வெங்கடரமணி உட்பட பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
     

No comments:

Post a Comment