இலவசப் பாட நூல்கள் வழங்கும் விழா
அலிசேக் மீரான் தலைமையில் நடைபெற்றது
மும்பை தமிழர் கூட்டமைப்பு சார்பாக செவ்வாய் கிழமை (2010 , செப் 15) காலை 10. 30 மணியளவில் சீதா கேம்ப் ஸ்டார் ஆங்கில உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் தி. மு. க. தலைமைச் செயற்குழு உறுப்பினரும் தொழிலதிபருமான அலிஷேக் மீரான் தலைமையில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்சியில் மும்பை தமிழ் மாணவர்களுக்கு தமிழ் நாடு அரசின் இலவசப்பாட நூல்கள் வழங்கப்பட்டன. எம். முகைதீன் பிச்சை வரவேற்புரை வழங்க பொ.அப்பாதுரை தொடக்கவுரை நிகழ்த்தினார். ஸ்டார் பள்ளி தலைவர் அமீர் முஹிதீன், தி. மு. க. இலக்கிய அணிச் செயலாளர் கொ.வள்ளுவன்,எழுத்தாளர் மன்ற செயலாளர் வதிலை பிரதாபன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.
மும்பைப் புறநகர் தி. மு. க. துணைச் செயலாளர் பேராசிரியர் சமீரா மீரான், எழுத்தாளர் மன்ற செயலாளர் அமலா ஸ்டான்லி உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மும்பை தமிழ் மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள், தமிழ் அன்பர்கள் பலர் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவை சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment