Monday, February 21, 2011

கல்யாணில் தி. மு. க. பொதுக்கூட்டம்

மும்பை புறநகர் திமுக சார்பாக தி. மு. க. பொதுக்கூட்டம்
கல்யாணில்   நடைபெற்றது
                மும்பை புறநகர் திமுக சார்பாக  ஞாயிற்றுக்கிழமை. 2011 , பிப் 20 மாலை 7 மணியளவில் கல்யாண் கிழக்கு,  கொல்செவாடி, சரஸ்வதி வித்யாமந்திர் பள்ளி வளாகத்தில்  தி. மு. க. பொதுக்கூட்டம் நடைபெற்றது.  மும்பை புறநகர் திமுக துணை செயலாளர் வதிலை பிரதாபன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கல்யாண் கிளைசெயலாளர் ம. மகேசன் வரவேற்புரையாற்றினார் . மும்பை புறநகர் திமுக துணைசெயலாளர் பேராசிரியர் சமீரா மீரான் தந்தை பெரியார் திருவுருவப் படத்தையும், அவைத்தலைவர் கொ. வள்ளுவன் பேரறிஞர் அண்ணா திருவுருவப் படத்தையும் திறந்து வைத்து உரையாற்றினார்கள்.
                மும்பை புறநகர் திமுக செயலாளர் பொ. அப்பாதுரை சிறப்புரையாற்ற, தி. மு. க. தலைமைசெயற்குழு உறுப்பினர் அலிசேக் மீரான் சென்னையில் நடைபெற்ற தி. மு. க. பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து விளக்கவுரையாற்றினார்.  மும்பை புறநகர் திமுக பொருளாளர் பி. கிருஷ்ணன், செம்பூர் தி. மு. க. செயலாளர் கவிஞர் குணா,  முலுண்ட் சுப்பிரமணியம் , ஆறேகால்னி தர்மலிங்கம்,  அம்பர்நாத் தி. மு. க. செயலாளர் அண்ணா கதிர்வேல், தானா தி. மு. க. செயலாளர் கி. தனுஷ்கோடி, கல்யாண் தி. மு. க. அவைத்தலைவர் ஜி. ஜீவானந்தம், உல்லாஸ்நகர் லோகநாதன், கவிஞர்கள் தமிழ்நேசன், நெல்லை பைந்தமிழ், நம்பிராசன், உட்பட பலர் உரையாற்றுகிறார்கள்.    துரை. கிருஷ்ணன், சேக் சகாபுதீன்,  க. சிவராசன், அ. அல்லாபிச்சை, சுப்பிரமணியம், ஆர். முனுசாமி, ஜான் தாமஸ், எஸ். ஜெயக்குமார், என். வளர்மணி, பி. எஸ். ராமலிங்கம், வேல்முருகன், அ. வேலையா, டிம்லேசன், ப. உதயகுமார், முனியன்,  டென்சில், சங்கர் மாஸ்டர், செய்யது, இராமச்சந்திரன், க. இராமலிங்கம், கவிராஜ், சுந்தர், உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.  கல்யாண் கிளை மேலைப்புப் பிரதிநிதி சதாநந்தன் நன்றியுரையாற்றினார்.
கூட்ட ஏற்பாடுகளை கல்யாண் கிளை நிர்வாகிகள் வதிலை பிரதாபன்,   மகேசன், சதானந்தன், ஜிவனந்தன், ஜஸ்டின், ரமேஷ் சதானந்தன், ஆனந்தகுமார், தர்மா, தங்கம், அங்குசாமி ஆகியோர் மிக சிறப்பாக செய்திருந்தனர்.
முன்னதாக மும்பை புறநகர் தி. மு. க. மத்தியக்குழுக் கூட்டம் அவைத்தலைவர் கொ. வள்ளுவன்  தலைமையில் நடைபெற்றது.

Sunday, February 13, 2011

அரபிக் கடலோரம் அண்ணா

அரபிக் கடலோரம் அண்ணா
-  சமீராமீரான்
1 . காங்கிரசுக்கு  எதிராக  முதல் கூட்டணி  பேரறிஞர் அண்ணா அவர்கள்  மும்பைக்கு, அதாவது அன்றைய பம்பாய்க்கு, முதன்முதலாக வருகை தந்த நிகழ்வு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாகும். 1940 ஆம் ஆண்டின் தொடக்கத்தில்  நிகழ்ந்த இந்நிகழ்ச்சி குறித்த பதிவினை   பல  நூல்களில், இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் இன்னும் பிற மொழிகளிலும்  நாம்  காண முடியும்.
தந்தை பெரியாரால் தலைவராகப் போற்றப்பட்ட புரட்சியாளர் டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கர்,  அண்ணல் அம்பேத்கரால் பெரிதும் மதிக்கப்பட்ட பெரியார் ஈ. வே. இரா, இவர்கள் இருவராலும் பெரிதும் போற்றப்பட்ட காய்தே ஆஸாம்  முகமதலி ஜின்னா ஆகிய மூன்று மாபெரும் தலைவர்களும்  1940,  ஜனவரி 8 ஆம் நாள்  மும்பையில் சந்தித்துக் கொண்ட நிகழ்வு இந்திய அரசியல் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தியதாகும். 
மூன்று தலைவர்களும் அன்று ஒருங்கிணைந்து தீர்மானித்த திட்டங்கள் உலக நாடுகளின் கவனத்தை  இந்தியாவை நோக்கி திருப்பின. காங்கிரஸ் கட்சியில் உள்ள பிராமணரல்லாதவர்களை ஒருங்கிணைப்பது, காங்கிரஸ் கட்சியிலிருந்து இசுலாமியர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பிராமணரல்லாதவர்கள் அனைவரும் விலகி காங்கிரஸ் அல்லாத  கட்சிகளில் சேர்ந்துவிடுவது, மகர் இனத்தவர், திராவிடர், இசுலாமியர்களுக்கு என தனித்தனி  நாடு கேட்டு கோரிக்கை எழுப்புவது, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுப்பது, காங்கிரஸ்
அல்லாத கட்சிகளுடன் இணைந்து கூட்டு நடவடிக்கை குழு ஒன்றை அமைப்பது என  அன்றைய காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நிலைப்பாடு உறுதி செய்யப்பட்ட நிகழ்வு அது. 
மும்பைவாழ் பிராமணரல்லாதார் விடுத்திருந்த அழைப்பினை ஏற்று 1940 ஜனவரி 5 ஆம் நாள் அன்றைய நீதிக் கட்சியின் பொதுச் செயலாளர் பேரறிஞர் அண்ணா, ஜஸ்டிஸ் ஆசிரியர்  டி. ஏ. வி. நாதன், சண்டே அப்சர்வர்  இதழாசிரியர் பி. பாலசுப்ரமணியம், டி. பி. எஸ். பொன்னப்பன், சி. பஞ்சாட்சரம் ஆகியோருடன்  சென்னையிலிருந்து புறப்பட்டு அடுத்த நாள் மும்பை தாதர் நிலையத்தில் வந்து இறங்கினார் தந்தை பெரியார். சென்னையில் அவர்களை வழி அனுப்பி வைத்தவர்கள் குமார ராஜா முத்தையா செட்டியார் அவர்களும் ஜெனரல் கலிபுல்லா அவர்களும் ஆவர்.  
மும்பைத் தமிழர்கள் பெரியார், அண்ணா,   உடன் வந்த ஏனைய அறிஞர்கள் அனைவருக்கும் மிகச் சிறப்பான வரவேற்பு வழங்கினார்கள். இரண்டு வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் அவர்கள் அழைத்து வரப்பட்டார்கள். அன்று இரவும், அடுத்த நாளும் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் விருந்தோம்பலை 
ஏற்றுக் கொண்டனர். இரு தலைவர்களும் அரசியல், சமூகம் சார்ந்த பல செய்திகளை பகிர்ந்து கொண்டனர். அன்றைய அரசியல், சமூகச் சிக்கல்கள் குறித்து கலந்தாய்வு செய்தனர். அடுத்த நாள் அவர்கள் இருவரும் முகமது அலி ஜின்னா அவர்களை சந்தித்த
பிறகுதான்  நாம் முன்னர் குறிப்பிட்டது போல் இந்திய அரசியலில் பல திருப்பங்களுக்கு காரணமான் முடிவுகள் பல எடுக்கப்பட்டன. தீர்மானித்த
படியே அடுத்த மூன்றாவது
மாதத்தில், அதாவது 1940 மார்ச் 25 ஆம் நாள் லாகூரில் நடைபெற்ற அகில இந்திய முஸ்லிம் லீகின் மாநாட்டில் அதன் தலைவர் முகமதலி ஜின்னா அவர்கள் இசுலமியர்களுக்கான் தனி நாடு கோரிக்கையை முன் வைக்கிறார். அடுத்த ஏழாவது மாதம் திருவாரூர் மாநாட்டில் திராவிடநாடு கோரிக்கை தந்தை பெரியாரால் முன்மொழியப்பட்டது. அடுத்த முப்பது ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியை மிகவும் உறுதியாக எதிர்க்கும் அளவுக்கு பேரறிஞர் அண்ணா தன் 
உள்ளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவும், தன்னை தயார் படுத்திக் கொள்ளவும்  மும்பை வருகை  பெருங்காரணமாக
இருந்தது என்பதை பிறகு நிகழ்ந்த தமிழ்நாடு அரசியல் நிகழ்வுகள் நமக்கு உணர்த்தின.
அண்ணா சொன்னார், " 'திராவிடர்' என்ற மாபெரும் இனம் நம்முடையது. அந்த இனம் ஆரிய இனத்தின் ஆதிக்கப் படையெடுப்பால் மெல்ல, மெல்ல வீழ்ச்சியுற்றது. ஆனால் அந்த இனம் இன்னும் அழிந்துபடவில்லை. எத்தனை தலைமுறைகள் ஆனாலும் அழியவும் செய்யாது. அந்த வாழ்வாங்கு வாழ்ந்த இனத்தை மீண்டும் வளம்பெற செய்வதும், அந்த இனத்துக்குரிய பூபாகத்தை, திராவிடத் திருநாட்டை, ஆரிய இனத்தவரின் ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பதே நமது தலையாய கடமை.' 
இவ்வாறு திராவிட இன உணர்வை தன் கலை இலக்கியத் திறனைக்கொண்டு மக்களிடம் பரப்பினார் அண்ணா.  
'பொதுத் தொண்டை ஒரு கலையாக மாற்றியவர் தந்தை பெரியார்' என்பார் அண்ணா. அதேவேளையில்  கலைத்துறையையே பொதுத் தொண்டுக்குப் பயன்படுத்தியவர் அண்ணா என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அண்ணா மும்பை வந்தார். 
மும்பைத் தமிழர்களைப்  பெரிதும் மகிழச்செய்த நிகழ்வு அது. 
                                                                                                                 (தொடரும்)
 
   .

Saturday, February 5, 2011

பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பு

தி. மு. க. பொதுக்குழுக் கூட்டத்தில்
மும்பை புறநகர் தி. மு. க. வினர் பங்கேற்பு 
2011 ,   பிப்ரவரி 3 , வியாழக்கிழமை அன்று சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில்  நடைபெறவுள்ள தி. மு. க. பொதுக்குழுக் கூட்டத்தில்  மும்பை புறநகர் திமுக செயலாளர் பொ. அப்பாதுரை, திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் அலிசேக் மீரான், துணைசெயலாளர்கள் பேராசிரியர் சமீரா மீரான், வதிலை பிரதாபன், ஆகியோர் பங்கேற்றனர்.

Friday, February 4, 2011

பேரறிஞர் அண்ணா 42 ஆவது நினைவு நாள் கூட்டம்

சீத்தாகாம்பில் மும்பை புறநகர் தி. மு. க. சார்பாக
பேரறிஞர் அண்ணா 42 ஆவது  நினைவு நாள் கூட்டம்
மும்பை புறநகர் தி. மு. க. சார்பாக சீத்தாகேம்ப் தி. மு. க. கிளை அலுவலகமான தளபதி மு. க. ஸ்டாலின் மாளிகையில் 03 . 02 . 2011 .  வியாழக் கிழமை மாலை 7 மணியளவில் பேரறிஞர் அண்ணா 42 ஆவது  நினைவு நாள் கூட்டம் நடைபெற்றது . இக்கூட்டத்திற்கு மூத்த கழக உறுப்பினர் கே. சொக்கலிங்கம்  அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மும்பை புறநகர் தி. மு. க. அவைத்தலைவர் கொ. வள்ளுவன் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து நினைவுரையாற்றினார். 
சீத்தகாம்ப் கிளைக்கழககச் செயலாளர் பி. எஸ். இராமலிங்கம், தி, சா, திருவேங்கடம், ப.
உதயகுமார், பி.  ஆழ்வார், கே. கலியமூர்த்தி உட்பட பலர் நினைவுரையாற்றினார்கள். காசிநாதன், பரமசிவம், கார்த்திக், எஸ், சண்முகம் உட்பட கழகத்தவர்கள் பலர் முன்னிலை வகித்தனர்.