சீத்தாகாம்பில் மும்பை புறநகர் தி. மு. க. சார்பாக
பேரறிஞர் அண்ணா 42 ஆவது நினைவு நாள் கூட்டம்
மும்பை புறநகர் தி. மு. க. சார்பாக சீத்தாகேம்ப் தி. மு. க. கிளை அலுவலகமான தளபதி மு. க. ஸ்டாலின் மாளிகையில் 03 . 02 . 2011 . வியாழக் கிழமை மாலை 7 மணியளவில் பேரறிஞர் அண்ணா 42 ஆவது நினைவு நாள் கூட்டம் நடைபெற்றது . இக்கூட்டத்திற்கு மூத்த கழக உறுப்பினர் கே. சொக்கலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மும்பை புறநகர் தி. மு. க. அவைத்தலைவர் கொ. வள்ளுவன் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து நினைவுரையாற்றினார். சீத்தகாம்ப் கிளைக்கழககச் செயலாளர் பி. எஸ். இராமலிங்கம், தி, சா, திருவேங்கடம், ப.
உதயகுமார், பி. ஆழ்வார், கே. கலியமூர்த்தி உட்பட பலர் நினைவுரையாற்றினார்கள். காசிநாதன், பரமசிவம், கார்த்திக், எஸ், சண்முகம் உட்பட கழகத்தவர்கள் பலர் முன்னிலை வகித்தனர்.
No comments:
Post a Comment