பேரறிஞர் அண்ணா நூற்றாண்டுச் சிறப்பிதழ் வெளியீட்டு விழா
மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாக்கள் மும்பையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.
மும்பையில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாக்களை மிகச் சிறப்பாக கொண்டாடிய பெருமை இன்னொரு அமைப்புக்கும் உண்டு. அது, திரு நாஞ்சில் அசோகன் அவர்களை தலைவராகக் கொண்டு
இயங்கி வரும் கவிஞர் கண்ணதாசன் இலக்கியப் பேரவை ஆகும்.
2008 ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு மாநாடும், 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்களில் அண்ணா நூற்றாண்டு விழாவும் நடத்தி பெருமை கொண்ட இப் பேரவையின் காலாண்டிதழான மும்பைத் தூரிகையின் சார்பாக பேரறிஞர் அண்ணா நூற்றாண்டுச் சிறப்பிதழ் வெளியீட்டு விழா, 2010 , ஏப்ரல் திங்களில்
நடைபெற்றது.
11 . 04 .2010 , ஞாயிற்றுக்கிழமை மாலையில் மும்பைத் தமிழ்ச் சங்க சிற்றரங்கில் நடைபெற்ற
இவ்விழாவிற்கு பேரவையின் தலைவர் திரு. நாஞ்சில் சி. அசோகன் தலைமை தாங்கினார். மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் பேராசிரியர் சமீரா மீரான் வரவேற்புரையாற்ற,
பன்வேல் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. இரவிபிள்ளை தொடக்கவுரையாற்றினார். இதழின் முதல் படியை
திரு. த. மு. பொற்கோ வெளியிட திரு. சு. குமணராசன் பெற்றுக்கொண்டார்.
திரு வெ. இளமுருகு, கொ. வள்ளுவன் உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மும்பையின் பிரபல கண் மருத்துவர் எஸ். நடராஜன், தொழிலதிபர்
எஸ். தங்கவேல் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். இறுதியாக பேரவை அமைப்பாளர் நெல்லை நாதன்
நன்றியுரையாற்றினார்.