Sunday, May 22, 2011

பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா

பம்பாய் திருவள்ளுவர் மன்றம் சார்பாக
பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா
மும்பை பாண்டுப் பகுதியில் உள்ள பம்பாய் திருவள்ளுவர் மன்றத்தின் சார்பாக பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா நடைபெற்றது. 2008 , டிசம்பர் 20 ஆம் நாள் சனிக்கிழமை மாலை 7 மணியளவில் பம்பாய் திருவள்ளுவர் மன்றத்தில் உள்ள முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் 
கலை அரங்கில் நடைபெற்ற இவ்விழாவிற்கு த. மு. பொற்கோ தலைமை தாங்கினார்
பம்பாய் திருவள்ளுவர் மன்றச் செயலாளர் வி. தேவதாசன் வரவேற்புரையாற்றினார்.
திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் 
சிறப்புரையாற்றினார்.  பொ. அப்பாதுரை, சு. குமணராசன் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் 
பங்கேற்றனர். 
முதல்நாள் வெள்ளிக்கிழமை அம்பர்நாத் முத்தமிழ் மன்றம் சார்பாக அம்பர்நாத் பகுதியில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவிலும் பங்கேற்று பேராசிரியர் சுப. வீரபாண்டியன் சிறப்புரையாற்றினார்.
    

No comments:

Post a Comment