இலக்கிய அணி சார்பாக முப்பெரு விழா குறித்து
மும்பை புறநகர் தி.மு.க. கலந்தாய்வுக் கூட்டம்
மும்பை புறநகர் திமுகவின் கலந்தாய்வுக் கூட்டம் 24.09.2017 அன்று மும்பை ரஹேஜா வளாகத்தில் செயலாளர் அலிசேக் மீரான் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலக்கிய அணிசார்பாக நடைபெறவுள்ள முப்பெருவிழாவை மிகச்சிறப்பாக நடத்துவது குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது.
சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கும் தலைமைக்கழக இலக்கிய அணியின் மாநிலச் செயலாளர் கவிஞர் தஞ்சை கூத்தரசன், தலைமை நிலையச் பேச்சாளர் கந்திலி கரிகாலன் ஆகியோரை சிறப்பான முறையில் வரவேற்பதோடு, அனைத்து கிளைக்கழகங்களிலிருந்தும் கழகத் தோழர்கள் வரவைத்து முப்பெருவிழா நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக நடத்துவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
கழகச் செயல் தலைவர் தளபதி அவர்கள் பங்கேற்ற திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவை மிகச் சிறப்பாக நடத்தி திருவள்ளுவருக்கு பெருமை சேர்த்த பம்பாய் திருவள்ளுவர் மன்றத் தலைவர் திரு. ஜேம்ஸ் தேவதாசன், தமிழின இரயில் பயணிகள் சங்கத்தின் மூலமாக மும்பை தமிழின இரயில் பயணிகளுக்கு மிகச் சிறப்பாகத் தொண்டாற்றி வரும் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு. டி. அப்பாதுரை ஆகிய இருவரையும் முப்பெரு விழாவின்போது பாராட்டி சிறப்பிப்பது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
முன்னதாக இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் வ. இரா. தமிழ்நேசன் அனைவரையும் வரவேற்று முப்பெருவிழா ஏற்பாடுகள் குறித்து விளக்கினார்
இக்கலதாய்வுக் கூட்டத்தில்
பி. கிருஷ்ணன் (பொருளாளர்), பேராசிரியர் சமீரா மீரான் (துணைச் செய்லாளர்),முனைவர் வதிலை பிரதாபன் (துணைச் செயலாளர்), கவிஞர் வ. இரா. தமிழ்நேசன் (இலக்கிய அணி அமைப்பாளர்),
திரு. ந. வசந்தகுமார் (மாநில இளைஞரணி அமைப்பாளர்), திரு. வெ. சதானந்தன் (இலக்கிய அணி அவைத் தலைவர்),
திரு. ப. உதயகுமா (இலக்கிய அணி பொருளாளர்), திரு. வெ. அ. ஜெயினுலாபிதீன் (இலக்கிய அணி துணைஅமைப்பாளர்),
திரு. இரா. கணேசன் (இளைஞரணி துணை அமைப்பாளர்), திரு. கு. மாரியப்பன் (பாண்டுப் கிளைச் செயளாளர்), திரு. மா. சக்திவேல் (முலுண்ட் கிளைத் துணைச் செயலாளர்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.