மும்பை புறநகர் தி.மு.க. சார்பாக
அண்ணா பிறந்தநாள் விழா
மும்பை புறநகர் திமுக சார்பாக மும்பை புறநகர் பகுதிகளில் பேரறிஞர் அண்ணாவின் 109ஆவது பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அந்தந்த பகுதிகளில் தி.மு.க. வினரும் பொது மக்களும் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். கிளைக்கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.மும்பை புறநகர் கோரேகாவ், பிவாண்டி, முலுண்ட் பகுதி கிளைக்கழகங்கள் சார்பாக நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகளில் புறநகர் மாநில திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்
மும்பை புறநகர் தி.மு.க கோரேகான் கிளை சார்பாக பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவில் மும்பை புறநகர் மாநிலச் செயலாளர் அலிசேக் மீரான் தலைமையேற்று பேரறிஞர் அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து சிறப்புரை நிகழ்த்தினார். கோரேகான் கிளைச் செயலாளர்.த. விஜயகுமார் வரவேற்புரை நிகழ்த்த, மும்பை புறநகர் மாநில இலக்கிய அணிச்செயலாளர் கவிஞர் வ.இரா.தமிழ்நேசன், இலக்கிய அணி புரவலர் திரு. குமரேசன், கோராகான் கிளை இலக்கிய அணிச்செயலாளர் அண்ணாதுரை உள்ளிட்டோர் உரையாற்றினர். இந் நிகழ்ச்சியில் எல்.ஜான் வர்கீஸ், கே.இராஜூ, எம்.இராஜா சேவியர், கே.பி.மாரிமுத்து,ஆர்.கிருஷ்ணன், கே.குருசாமி, பி.கண்ணதாசன், ஆர்.சக்திவேல், டி. இதயசாமி, எம்.இரவி, எஸ். சபரிமுத்து, மணி , ஜி.சங்கர், தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் கோரேகான் கிளை அவைத்தலைவர் வி.எம் ஸ்வாமி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
மும்பை புறநகர் தி.மு.க. பிவண்டி கிளை சார்பில் பிவண்டி தாமன்கர் நாக்காவில் உள்ள கிளை அலுவலகத்தில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவில் மும்பை திமுக இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்தகுமார் பேரறிஞர் அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கிளை அமைப்பாளர் மெகபூப் பாஷாசேக் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் இலக்கிய அணி துணை அமைப்பாளர் வெ .ஜெயினுலாபுதீன், இளைஞரணி துணை அமைப்பாளர் இரா கணேசன்,பிவண்டி கிளை அவைத்தலைவர் முகமதுஅலி மற்றும் பொருளாளர் முஸ்தாக் அலி ஆகியோர் பேரறிஞர் அண்ணாவின் சாதனைகளையும் பெருமைகளையும் நினைவுரையாற்றினர். கிளைக் கழக நிர்வாகிகள் செந்தில்குமார் , லலித்குமார்,நடராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
மும்பை புறநகர் தி.மு.க. முலுண்ட் கிளை சார்பாக ஆர்.எச்.பி. சாலையில் மும்பை புறநகர் தி.மு.க. துணைச் செயலாளர் பேராசிரியர் சமீரா மீரான் தலைமையில் அண்ணா பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிளைக்கழக நிர்வாகி டி. மணி அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கிளைச்செயலாளர் சு. பெருமாள் மற்றும் துணைச் செயலாளர் மா. சக்திவேல் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினர். என். சாமுவேல் ராஜ், ஏ. இரவி, அப்துல் அஜீஸ், ச. பிரதீப் உள்ளிட்டோரும் அப்பகுதி மாணவர்கள் மற்றும் இளைஞர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment