மும்பை புறகா தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்
மும்பை புறநகர் திமுக நிர்வாகிகள் கூட்டம் செயலாளர் அலிசேக் மீரான் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டம் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.
மும்பை புறநகர் திமுக நிர்வாகிகள் கூட்டம் 12.10.2017 அன்று மாலை 7 மணியளவில் செயலாளர் அலிசேக் மீரான் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை - புதுப்பித்தலை விரைவு படுத்த வேண்டியும் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட க. ஆறுமுகப் பாண்டியன் மீது தி.மு.க. தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதை வரவேற்றும் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம்:- 1.
கழகப் பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர்களின் ஆணைப்படி மும்பை மாநில புறநகர் பகுதிகளில் உறுப்பினர்கள் சேர்க்கவும் புதுப்பிக்கவும் அந்தந்த பகுதிகளில் உள்ள கிளைக்க கழக அமைப்பாளர்களிடன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு தேவையான அளவு விண்ணப்ப படிவங்களும் வழங்கப்பட்டுள்ளன. உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் பணியை விரைந்து முடித்திட புறநகர் கழக நிர்வாகிகளும் மூத்த கழக உறுப்பினர்களும் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தீர்மானம்: 2.
மும்பை புறநகர் தி.மு.க இலக்கிய அணியின் அவைத்தலைவராக இருந்த திரு. க. ஆறுமுகப் பாண்டியன் புறநகர் தி.மு.க. நிர்வாகிகள் குறித்து தொடர்ந்து முகநூலில் அவதூறு பரப்பி வந்ததால், இலக்கிய அணி அவைத் தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நடவடிக்கைக்குப் பிறகும் அவர் திருந்தவில்லை. பம்பாய் திருவள்ளுவர் மன்றம் சார்பாக நடைபெற்ற திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் கழகச் செயல் தலைவர் தளபதி அவர்கள் கலந்து கொண்டு திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து விழா பேருரை நிகழ்த்தினார். இவ்விழா குறித்தும், விழாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த புறநகர் திமுக செயலாளர் குறித்தும் இளைஞர் அணி மாநில அமைப்பாளர் மற்றும் பிற நிர்வாகிகள் குறித்தும் ஆறுமுகப் பாண்டியன் மீண்டும் அவதூறுகளைப் பரப்பினார்.
புறநகர் தி.மு.க. நிர்வாகிகள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்பி தி.மு.கழகத்திற்கு களங்கம் ஏற்படுத்திய க. ஆறுமுகபாண்டியன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கழக உறுப்பினர் பொறுப்பிலிருந்து கழகப் பொதுச் செயலாளர் அவர்களால் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
தனது அடாவடித்ததனத்தால் புறநகர் தி.மு.க. நிர்வாகத்திற்கு இடையூறுகள் செய்ததோடு தி.மு.கழகத்தின் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்திய க. ஆறுமுகப் பாண்டியன் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கையை கழகப் பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் எடுத்துள்ளார். இந்நடவடிக்கையை மும்பை மாநில புறநகர் கழகம் முழுமனதுடன் வரவேற்கிறது.
தீர்மானம்: 3.
01. 10. 17 அன்று நடைபெற்ற முப்பெரு விழா நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக திட்டமிட்டு வெற்றிகரமாக நடத்திக் காட்டிய மும்பை புறநகர் தி.மு.க. இலக்கியணி அமைப்பாளர் மற்றும் நிர்வாகிகள், உறுதுணையாக இருந்து விழாவின் வெற்றிக்கு உழைத்த பிற நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவருக்கும் இந்நிர்வாகக்குழு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது
இத்தீர்மானங்கள் அனைத்தும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது

No comments:
Post a Comment