மும்பை புறநகர் தி.மு.க இலக்கிய அணி சார்பாக
முப்பெரும் விழா
தஞ்சை கூத்தரசன் , கந்திலி கரிகாலன் பங்கேற்பு
மும்பை புறநகர் மாநில தி.மு.க இலக்கிய அணி சார்பாக முப்பெரும்விழா மும்பை, மாதுங்கா பகுதியில் உள்ள குஜராத் சமாஜ் குளிரரங்கில்நடைபெற்றது.தலைமைக் கழக மாநில இலக்கிய அணிச் செயலாளர் கவிஞர் தஞ்சைகூத்தரசன், தலைமைக் கழகப் பேச்சாளர் கந்திலி கரிகாலன் ஆகியோர்சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற இவ்விழாவில் மும்பை புறநகர்மாநில தி.மு.க இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் வ.இரா.தமிழ்நேசன் தலைமை தாங்கினார். பொருளாளர் ப. உதயகுமார் வரவேற்புரைஆற்ற. மும்பை மாநில இளைஞரணி அமைப்பாளர் ந. வசந்த குமார்தொடக்கவுரை நிகழ்த்தினார்.
மும்பை புறநகர் மாநில தி.மு.க செயலாளர் அலிசேக் மீரான் தந்தைபெரியார் திருவுருவப் படத்தையும், மும்பை மாநகர தி.மு.க.பொறுப்பாளர் கருவூர். இரா. பழனிச்சாமி பேரறிஞர் அண்ணா திருவுருவப்படத்தையும் திறந்து வைத்து உரை நிகழ்த்தினார்கள்..
விழாவில் மும்பை புறநகர் மாநில கிளைக் கழக நிர்வாகிகளிடம் கழக உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தலுக்கான தலைமைக் கழக விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது.
விழா பேருரை நிகழ்த்திய தலைமைக் கழக மாநில இலக்கிய அணிச்செயலாளர் கவிஞர் தஞ்சை கூத்தரசன் கழக வரலாற்றுச் செய்திகளைமிகச் சிறப்பாகத் தொகுத்துக் கூறினார்
சிறப்புரை ஆற்றிய தலைமைக் கழகப் பேச்சாளர் கந்திலி கரிகாலன்முப்பெரு விழா சிறப்புகளோடு தமிழகத்தின் நிகழ்கால அரசியலையும்நகைச்சுவையோடு எடுத்துக் கூறி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ. கணேசன், புறநகர் தி.மு.கதுணைச் செயலாளர்கள்
பேராசிரியர் சமீரா மீரான், முனைவர் வதிலை பிரதாபன் ஆகியோர்முறையே, ’தந்தை பெரியார்”, ’பேரறிஞர் அண்ணா”, ”தி.மு.கழகம்” என்றதலைப்புகளில் கருத்துரை வழங்கினர்.
ஆதிதிராவிட மகாஜன சங்கத் தலைவர் க. வ. அசோக்குமார், பம்பாய் திருவள்ளுவர் மன்றத் தலைவர் ஜேம்ஸ் தேவதாசன், மாநிலஇளைஞரணி துணை அமைப்பாளர் இரா.கணேசன், மும்பை திமுகமாறன் ஆரிய சங்காரன், இந்தியப் பேனா நண்பர் பேரவைத் தலைவர்மா.கருண், மால்வாணி எஸ்.பி. செழியன் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
இக்கூட்டத்தில் திமுக செயல் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் கலந்துகொண்ட திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடுசெய்து நடத்திய பம்பாய் திருவள்ளுவர் மன்றத் தலைவர் ஜேம்ஸ்தேவதாசனுக்கும், மும்பை இரயில் பயணிகளின் நலனுக்காக சிறப்பாகசெயல் பட்டு வரும் தமிழின இரயில் பயணிகள் சங்கச் செயலாளர் டி.அப்பாதுரைக்கும் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மும்பை புறநகர் தி.மு.க பொருளாளர் பி.கிருஷ்ணன், மும்பை தி.மு.கஇலக்கிய அணி அமைப்பாளர் ஜான் சாமுவேல் , மும்பை புறநகர் தி.மு.ககலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளர் பாவலர் நெல்லைபைந்தமிழ், தாராவி திமுக மேனாள் செயலாளர் என். வி. சண்முகராசன்,இலக்கிய அணி புரவலர் கவிஞர் இரஜகை நிலவன், பிவாண்டி கிளைச் செயலாளர் மெஹ்பூப் பாட்சா, இலக்கிய அணி துணை அமைப்பாளர்தமிழின நேசன், கோரேகாவ் கிளை இலக்கிய அணி அமைப்பாளர் எ.அண்ணாதுரை, பாண்டூப் கிளைச் செயலாளர் கு. மாரியப்பன் ஆகியோர்வாழ்த்துரை வழங்கினர்.
மும்பை புறநகர் தி.மு.க இலக்கிய அணித் தலைவர் வே.சதானந்தன்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, இலக்கிய அணி துணைச் செயலாளர் வெ.அ. ஜெய்னுல்ஆப்தீன்நன்றியுரை ஆற்றினார்.
முன்னதாக மும்பை இரயில் நிலைய நடை மேம்பால கூட்ட நெரிசலில்உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
அ.இரவிச்சந்திரன், ந. வளர்மணி, வீரை.சோ.பாபு, பணகுடிசண்முகவேல், சா.பொன்னம்பலம், கோ.சீனிவாசகம், பு.தேவராஜன், டி.அப்பாதுரை, க.மூர்த்தி, ஜான் வர்கீஸ், , பேராசிரியர் சம்பத், இரவிஇரஜினி, இராஜா சேவியர், முஸ்தாக் அலி, எஸ்.பெர்லின், பெ.ஆழ்வார், ஆ.பாலமுருகன், க.இராஜன், அ.அருணாசலம், ஆ. பாலசுப்ரமணியம் , சு.பெருமாள், அ.வேலையா, அ.இரவி, செய்யது அலி, மா.சக்திவேல்,சேர்மன் துரை, நம்பி, வே.இராஜேந்திரன், ஆறுமுகம், தில்லை,தமிழரசன், மாடசாமி, சி.இராமசாமி, மு.பால்ராஜ், அ. பாஸ்கர், க.மரியதாசன், என். சேர்மன் துரை, எம். சேகர், த. நல்லையா, குமார், ச. முருகன், இரா. மதியழகன், ஆர். கிருஷ்ண மூர்த்தி, க. அண்ணதுரை, சி, இராமசாமி, இரவி, மகா கிருபனந்தம், அ. கண்ணன், வாசி.பி.ஆறுமுகம், வி.தில்லை, ச. மாடசாமி, சு. செந்தில்குமார், ச. பிரவிண் குமார், பி.மணி பாஸ்கர், சி. பழனிச்சாமி, சு.பெருமாள், எ.இரவி , மு.சங்கர், திருமதி. சசி அருணாசலம், க.இராசன், எம்.சண்முகவேல், தே. ஸ்டீபன் ஜெபராஜ், ஏ.ஜெ. இரஷீத் அலி, ஷாஜஹான், முருகானந்தம், கு.மாரியப்பன், முத்துமாணிக்கம், சையத் ரபி, பி. சேவியர், களயன், வே.இராஜேந்திரன், வி.முனியன், இராமச்சந்திரன், சுரேஷ், சரவணன், இரா. தியாகராஜன், வெ .பிரசாந்த். உள்ளிட்ட மும்பை தமிழ்ப்பிரமுகர்கள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை மும்பை புறநகர் தி. மு.க. இலக்கிய அணியினர் மிகச்சிறப்பாக செய்திருந்தனர்.
No comments:
Post a Comment