Monday, November 20, 2017

முலுண்ட் இளைஞரணி


மும்பை புறநகர் மாநிலமுலுண்ட் கிளைக் கழக இளைஞரணி உதயம்

******************++++++++++****""""""*+++++++++
மும்பை புறநகர் மாநில தி.மு.கழகத்தின் சார்பாக முலுண்ட் வித்யா மந்திர் பள்ளியில் முலுண்ட் கிளைக் கழகத்தின் இளைஞரணி துவக்க விழா நடைபெற்றது.
மும்பை .புறநகர தி.மு.க. செயலாளர் அலிசேக்மீரான் மீரான்  தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மும்பை மாநில தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்தகுமார் மற்றும் மும்பை .புறநகர தி.மு.க. பொருளாளர் பி. கிருஷ்ணன், துணைச் செயலாளர்கள் பேராசிரியர் சமீரா மீரான், முனைவர் வதிலை பிரதாபன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முலுண்ட் பகுதியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் தங்களை திமுக இளைஞரணியில் இணைத்துக் கொண்ட . இவ்விழாவில் முலுண்ட் கிளை இளைஞரணி அமைப்பாளராக பால. உதயகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


முலுண்ட் கிளைச் செயலாளர் சு. பெருமாள் வரவேற்புரையாற்ற, மேலமைப்புப் பிரதிநிதி ச. சுப்பிரமணியன் தொடக்கவுரையாற்றினார்.  இளைஞரணி அமைப்பாளர் ந. வசந்தகுமார், இலக்கிய அணி அமைப்பாளர் வ. இரா. தமிழ்நேசன், பாண்டுப் கிளைச் செயலாளர் கு. மாரியப்பன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
இலக்கிய அணித் தலைவர் வே. சதானந்தன், புரவலர் சோ.பா. குமரேசன், இளைஞரணி துணை அமைப்பாளர் இரா. கணேசன், மால்வானி எஸ். பி. செழியன்,  பிவாண்டி மெஹ்பூப் பாட்சா, பேராசிரியர் சம்பத், முத்தமிழ் தண்டபாணி, தானே பாலமுருகன், வாசி தில்லை, வாசி பி. ஆறுமுகம், முலுண்ட் கிளை அவைத் தலைவர் ரவி அர்ஜுன், துணைச் செயலாளர்கள் மா. சக்திவேல் மாடசாமி, ஆ. பாலசுப்பிரமணியன், தமிழரசன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர்.
மேலும் எம். இசக்கிமுத்து,  எஸ். இரகுநாதப் பெருமாள், மா. முருகன், பி. நம்பி, வி. சங்கர், ஆர். சக்திவேல், அப்துல் லத்தீப் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இறுதியாக முலுண்ட் கிளை இளைஞரணி அமைப்பாளர் பால. உதயகுமார் நன்றி கூறினார்.




Sunday, November 12, 2017

மகளிரணி கலந்தாய்வு


மகளிரணி கலந்தாய்வுக் கூட்டம்

மும்பை புறநகர் தி.மு.. சார்பாக மகளிரணி கலந்தாய்வுக் கூட்டம்
அலிசேக் மீரான் முன்னிலையில்
பிரச்சார குழுச் செயலாளர் நளினி சாரங்கன் பங்கேற்பு

மும்பை புறநகர் தி.மு.. சார்பாக மகளிரணி கலந்தாய்வுக் கூட்டம் மும்பை ஜுஹு பகுதியில் நடைபெற்றதுமும்பை புறநகர் தி.மு.. செயலாளர் அலிசேக் மீரான் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தி.மு.. தலைமை நிலைய மாநில பிரச்சார குழுச் செயலாளர் திருமதி. நளினி சாரங்கன் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்
தன்னுடைய கருத்துரையில் தி.மு.கழகம் பெண்களின் முன்னேற்றத்திற்கு ஆற்றிய அரும்பணிகள் குறித்தும், தி.மு.கழத்தில் பெண்களின் பங்களிப்பு குறித்தும் சிறப்பாகப் பேசினார்மும்பை புறநகர் தி.மு.. மகளிரணியினர் விமலா இளங்கோ, அபிராமி வசந்த், நாக ஜோதி ராஜகுமாரன், தீபா கணேசன், அபிதா மீரான்சைபுன்னிசா, ஜெஸ்மின் சமீர் உள்ளிட்ட மகளிர் அணியினர் இக்கலந்தாய்வில் கலந்து கொண்டனர்


முன்னதாக திருமதி நளினி சாரங்கனுக்கு மும்பை புறநகர் தி.மு.. சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மகளிர் அணியினருடன் மும்பை புறநகர் தி.மு.. செயலாளர் அலிசேக் மீரான் , பொருளாளர் பி. கிருஷ்ணன், துணைச் செயலாளர்கள் பேராசிரியர் சமீரா மீரான், முனைவர் வதிலை பிரதாபன், இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் . இரா. தமிழ்நேசன், இளைஞரணி மாநில அமைப்பாளர் . வசந்த குமார், இலக்கிய அணித்  தலைவர் வே. சதானந்தன், பொருளாளர் . உதயகுமார், இளைஞரணி துணை அமைப்பாளர் இரா. கணேசன், முலுண்ட . சுப்பிரமணியன், ஜெரிமெரி கிளைச் செயலாளர் பொ. . இளங்கோபிவாண்டி கிளைச் செயலாளர் மெஹ்பூப் பாட்சா, பொருளாளர் முஸ்தாக் அலி உள்ளிட்டோர் இவ்வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

முன்னதாக மகளிரணி கூட்டத்தில் பங்கேற்க மும்பை வருகை தந்த தி.மு.. தலைமை நிலைய மாநில பிரச்சார குழுச் செயலாளர் திருமதி. நளினி சாரங்கன் அவர்களை மும்பை புறநகர் தி.மு.. செயலாளர் அலிசேக் மீரான் மற்றும் புறநகர் தி.மு.. வின் மகளிரணியினர் விமலா இளங்கோ, அபிராமி வசந்த், நாக ஜோதி ராஜகுமாரன், தீபா கணேசன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்







Thursday, November 2, 2017

கலந்தாய்வுக் கூட்டம்

மும்பை புறநகர் திமுக கலந்தாய்வுக் கூட்டம்முலுண்டில் நடைபெற்றது


மும்பை புறநகர் தி.மு.. கலந்தாய்வுக் கூட்டம் செயலாளர் அலிசேக் மீரான் தலைமையில் முலுண்ட் மேற்கு வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மும்பையில் தி.மு.கழகத்திற்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கவும் மற்றும் புதுப்பிக்கவும் நிரப்பப்பட்ட விண்ணப்பப படிவங்களை செயலாளர் பிற நிர்வாகிகளிடமிருந்து பெற்றுக் கொண்டார். இக்கூட்டத்தில் மும்பை புறநகர் தி.மு.. துணைச் செயலாளர்கள்  பேராசிரியர் சமீரா மீரான், முனைவர் வதிலை பிரதாபன்

இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் வ. இரா தமிழ்நேசன், இளைஞரணி மாநில அமைப்பாளர் ந. வசந்தகுமார்,  துணை அமைப்பு நிர்வாகிகள்  வே. சதானந்தன், ப. உதயகுமார், சோ. பா. குமரேசன்,  கிளைக்கழக நிர்வாகிகள் ச. சுப்பிரமணி, , முகமதலி, முஸ்தாக் அலி, கு. மாரியப்பன், பொ. அ. இளங்கோ, ஆ. பாலமுருகன், சு.பெருமா,ள், மா. சக்திவேல், பெ. ஆழ்வார், அ. இரவி, வி. தில்லை, பி. ஆறுமுகம்,  முத்து கிருஷ்ணன், த. விஜயகுமார், இராஜா சேவியர், எம். இரவி, மாடசாமி,  பி. சேகர், மதியழகன், ப. வள்ளிநாயகம், அப்துல் லத்திப், உதய் பாலமுருகன், சு. தமிழரசன், ந. சக்திவேல்,  மாணிக்கம் உள்ளிட்ட தி.மு..வினர் கலந்து கொண்டனர்