Sunday, November 12, 2017

மகளிரணி கலந்தாய்வு


மகளிரணி கலந்தாய்வுக் கூட்டம்

மும்பை புறநகர் தி.மு.. சார்பாக மகளிரணி கலந்தாய்வுக் கூட்டம்
அலிசேக் மீரான் முன்னிலையில்
பிரச்சார குழுச் செயலாளர் நளினி சாரங்கன் பங்கேற்பு

மும்பை புறநகர் தி.மு.. சார்பாக மகளிரணி கலந்தாய்வுக் கூட்டம் மும்பை ஜுஹு பகுதியில் நடைபெற்றதுமும்பை புறநகர் தி.மு.. செயலாளர் அலிசேக் மீரான் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தி.மு.. தலைமை நிலைய மாநில பிரச்சார குழுச் செயலாளர் திருமதி. நளினி சாரங்கன் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்
தன்னுடைய கருத்துரையில் தி.மு.கழகம் பெண்களின் முன்னேற்றத்திற்கு ஆற்றிய அரும்பணிகள் குறித்தும், தி.மு.கழத்தில் பெண்களின் பங்களிப்பு குறித்தும் சிறப்பாகப் பேசினார்மும்பை புறநகர் தி.மு.. மகளிரணியினர் விமலா இளங்கோ, அபிராமி வசந்த், நாக ஜோதி ராஜகுமாரன், தீபா கணேசன், அபிதா மீரான்சைபுன்னிசா, ஜெஸ்மின் சமீர் உள்ளிட்ட மகளிர் அணியினர் இக்கலந்தாய்வில் கலந்து கொண்டனர்


முன்னதாக திருமதி நளினி சாரங்கனுக்கு மும்பை புறநகர் தி.மு.. சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மகளிர் அணியினருடன் மும்பை புறநகர் தி.மு.. செயலாளர் அலிசேக் மீரான் , பொருளாளர் பி. கிருஷ்ணன், துணைச் செயலாளர்கள் பேராசிரியர் சமீரா மீரான், முனைவர் வதிலை பிரதாபன், இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் . இரா. தமிழ்நேசன், இளைஞரணி மாநில அமைப்பாளர் . வசந்த குமார், இலக்கிய அணித்  தலைவர் வே. சதானந்தன், பொருளாளர் . உதயகுமார், இளைஞரணி துணை அமைப்பாளர் இரா. கணேசன், முலுண்ட . சுப்பிரமணியன், ஜெரிமெரி கிளைச் செயலாளர் பொ. . இளங்கோபிவாண்டி கிளைச் செயலாளர் மெஹ்பூப் பாட்சா, பொருளாளர் முஸ்தாக் அலி உள்ளிட்டோர் இவ்வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

முன்னதாக மகளிரணி கூட்டத்தில் பங்கேற்க மும்பை வருகை தந்த தி.மு.. தலைமை நிலைய மாநில பிரச்சார குழுச் செயலாளர் திருமதி. நளினி சாரங்கன் அவர்களை மும்பை புறநகர் தி.மு.. செயலாளர் அலிசேக் மீரான் மற்றும் புறநகர் தி.மு.. வின் மகளிரணியினர் விமலா இளங்கோ, அபிராமி வசந்த், நாக ஜோதி ராஜகுமாரன், தீபா கணேசன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்







No comments:

Post a Comment