Monday, November 20, 2017

முலுண்ட் இளைஞரணி


மும்பை புறநகர் மாநிலமுலுண்ட் கிளைக் கழக இளைஞரணி உதயம்

******************++++++++++****""""""*+++++++++
மும்பை புறநகர் மாநில தி.மு.கழகத்தின் சார்பாக முலுண்ட் வித்யா மந்திர் பள்ளியில் முலுண்ட் கிளைக் கழகத்தின் இளைஞரணி துவக்க விழா நடைபெற்றது.
மும்பை .புறநகர தி.மு.க. செயலாளர் அலிசேக்மீரான் மீரான்  தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மும்பை மாநில தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்தகுமார் மற்றும் மும்பை .புறநகர தி.மு.க. பொருளாளர் பி. கிருஷ்ணன், துணைச் செயலாளர்கள் பேராசிரியர் சமீரா மீரான், முனைவர் வதிலை பிரதாபன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முலுண்ட் பகுதியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் தங்களை திமுக இளைஞரணியில் இணைத்துக் கொண்ட . இவ்விழாவில் முலுண்ட் கிளை இளைஞரணி அமைப்பாளராக பால. உதயகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


முலுண்ட் கிளைச் செயலாளர் சு. பெருமாள் வரவேற்புரையாற்ற, மேலமைப்புப் பிரதிநிதி ச. சுப்பிரமணியன் தொடக்கவுரையாற்றினார்.  இளைஞரணி அமைப்பாளர் ந. வசந்தகுமார், இலக்கிய அணி அமைப்பாளர் வ. இரா. தமிழ்நேசன், பாண்டுப் கிளைச் செயலாளர் கு. மாரியப்பன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
இலக்கிய அணித் தலைவர் வே. சதானந்தன், புரவலர் சோ.பா. குமரேசன், இளைஞரணி துணை அமைப்பாளர் இரா. கணேசன், மால்வானி எஸ். பி. செழியன்,  பிவாண்டி மெஹ்பூப் பாட்சா, பேராசிரியர் சம்பத், முத்தமிழ் தண்டபாணி, தானே பாலமுருகன், வாசி தில்லை, வாசி பி. ஆறுமுகம், முலுண்ட் கிளை அவைத் தலைவர் ரவி அர்ஜுன், துணைச் செயலாளர்கள் மா. சக்திவேல் மாடசாமி, ஆ. பாலசுப்பிரமணியன், தமிழரசன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர்.
மேலும் எம். இசக்கிமுத்து,  எஸ். இரகுநாதப் பெருமாள், மா. முருகன், பி. நம்பி, வி. சங்கர், ஆர். சக்திவேல், அப்துல் லத்தீப் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இறுதியாக முலுண்ட் கிளை இளைஞரணி அமைப்பாளர் பால. உதயகுமார் நன்றி கூறினார்.




No comments:

Post a Comment