பாண்டுப் கிளை திமுக இளைஞரணி தொடக்கவிழா
மற்றும்
மற்றும்
2018ஆம் ஆண்டு நாள்காட்டி வெளியீட்டு விழா
அலிசேக் மீரான் சிறப்புரையாற்றினார்
மும்பை புறநகர்
தி.மு.க. பாண்டுப் கிளை இளைஞரணி தொடக்க விழாவும் 2018 புத்தாண்டு நாள்காட்டி வெளியீட்டு விழாவும் பாண்டுப்பில்
உள்ள பம்பாய் திருவள்ளுவர் மன்றத்தின் பிரைட் மேனிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது,
பம்பாய் திருவள்ளுவர்
மன்றத்தலைவரும், பாண்டுப் திமுக வின் மேலமைப்புப் பிரதிநிதியுமான ஜேம்ஸ் தேவதாசன் தலைமையில்
நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மும்பை புறநகர் திமுக செயலாளர் அலிசேக் மீரான் சிறப்புரையாற்றினார்
பாண்டுப் கிளைச்
செயலாளர் கு.மாரியப்பன் வரவேற்புரையாற்ற, தி.மு.க. இளைஞரணி மும்பை மாநில அமைப்பாளர்
ந. வசந்தகுமார் தொடக்கவுரையாற்றினார். மும்பை புறநகர் திமுக பொருளாளர் பி. கிருஷ்ணன், துணைச் செயலாளர் பேராசிரியர் சமீரா மீரான் ஆகியோர்
வாழ்த்துரை வழங்கினர்
பாண்டுப் கிளை
இளைஞரணி அமைப்பாளர் அனந்தகுமார் உள்ளிட்ட இளைஞரணி தோழர்களை மாநில இளைஞரணி அமைப்பாளர்
அறிமுகம் செய்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில்
மும்பை புறநகர் திமுகவின் 2018ஆம் ஆண்டுக்கான நாள் காட்டி வெளியிடப்பட்டது. மும்பை
புறநகர் திமுக முன்னாள் அவைத் தலைவர் வி. தேவதாசன் நாள்காட்டியை வெளியிட முன்னாள் செயலாளர்
பொ. அப்பாதுரை பெற்றுக்கொண்டார்.
மும்பை புறநகர்
திமுகவின் 20 ஆண்டுகள் நிறைவு விழாவை முன்னிட்டு நினைவுப்பரிசுகள் இவ்விழாவில் வழங்கப்பட்டன.
தொடக்ககால நிர்வாகிகளான வி.தேவதாசன், பொ.அப்பாதுரை, அலிசேக் மீரான் ஆகியோருக்கு முறையே
எஸ்.பி. செழியன், பேராசிரியர் சமீரா மீரான், பி. கிருஷ்ணன் ஆகியோர் நினைவுப் பரிசுகளை
வழங்கினர்.
நிகழ்ச்சிகளை மும்பை
புறநகர் திமுக இலக்கிய அணிச் செயலாளர் கவிஞர் வ. இரா. தமிழ்நேசன் தொகுத்து வழங்க, பாண்டுப்
கிளைத் துணைச் செயலாளர் சேர்மன்துரை நன்றியுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில்
இலக்கிய அணி தலைவர் வே. சதானந்தன், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இரா. கணேசன், யோவான்,
க. மூர்த்தி, பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளர்
கவிஞர் நெல்லை பைந்தமிழ், கிளைக்கழக நிர்வாகிகள் மெஹ்பூப் பாட்சா சேக், முகமதலி, பேராசிரியர்
சம்பத், ஆ. பாலமுருகன், சு. பெருமாள், ச. .பழனி, சக்திவேல், மாடசாமி, ரவி அர்ஜுன்,
உதய் பால முருகன், ஆர். இரவி, அய்யாவு, பகுத்தறிவாளர்
கழகத் தலைவர் அ. இரவிச்சந்திரன், ஆ. பாலசுப்பிரமணியன், அணுசக்திநகர் கலை மன்றச் செயலாளர் பு. தேவராஜன்,
பாண்டுப் கிளை நிர்வாகிகள் செபஸ்டின், முத்துகிருஷ்ணன்,
சதாசிவம், உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.
மும்பை புறநகர்
கழகத்தினர் க. டேவிட் , பேராசிரியர் குமார செல்வன், பேலஸ்துரை, ஆபிதீன் சேக், பி. ஜெயக்குமார்,
முருகேஷ், மதியழகன், எஸ். வேல்முருகன், மணிகண்டன், வே. குமாரவேல், வி. சங்கர், மு. பாபு,
எஸ். பாஸ்கர், எஸ்.கணபதி, சுரேஷ், மேகநாதன், குமார், மணி, சுபேந்திரன், அஜந்தா, சதீஷ்குமார்,
தினேஷ்குமார், எஸ். பி. சுவாமி, ரமேஷ், கந்தசாமி, பி.பாலசுப்பிரமணியன், செல்வன், பன்னீர்செல்வம்,
செந்தில்குமார் உள்ளிட்ட மும்பைத் தமிழன்பர்கள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment