Wednesday, January 24, 2018

சமீரா மீரான், தமிழ் நேசனுக்கு விருது

தி.மு.தலைமை இலக்கிய அணி சார்பாக 

சமீரா மீரான்தமிழ் நேசனுக்கு விருது

சென்னை தமிழ்ப் புத்தாண்டு விழாவில் வழங்கப்பட்டது

மும்பை புறநகர் தி.மு.துணைச் செயலாளர் பேராசியர் சமீரா மீரான் இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் இராதமிழ்நேசன் உள்ளிட்ட நால்வருக்கு தி.மு.தலைமை இலக்கிய அணி சார்பாக  விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.


சென்னை அண்ணா சாலையில் உள்ள அன்பகத்தில் தி.மு.தலைமை இலக்கிய அணி சார்பாக நடைபெற்ற  தைப்பொங்கல்தமிழ்ப் புத்தாண்டு பெருவிழாவில்மும்பை புறநகர் தி.மு.துணைச் செயலாளர் பேராசிரியர் சமீரா மீரானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும்,  மும்பை புறநகர் தி.மு.இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் இராதமிழ்நேசனுக்கு அயலகத் தமிழறிஞர் விருதும் வழங்கப்பட்டன.


தி.மு.தலமை இலக்கிய அணித் தலைவர் கவிவேந்தர் காவேழவேந்தன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் இலக்கிய அணிச் செயலாளர் கவிஞர் தஞ்சை கூத்தரசன் வரவேற்புரையாற்றமுன்னாள் மத்திய அமைச்சரும் தி.மு.கொள்கை பரப்புச் செயலாளருமான இராசா விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்இலக்கிய அணி புரவலர் புலவர் இந்திரகுமாரிமும்பை புறநகர் தி.மு.செயலாளர் அலிசேக் மீரான் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.


திமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கு.செல்வம்பூச்சி முருகன்வழக்கறிஞர் சூர்யா வெற்றி கொண்டான் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கவிஞர் ஈரோடு இறைவன்,  பேராசிரியர் சேவுகப் பெருமாள்போர்முரசு கதிரவன ஆகியோர் தகுதியுரையை படிக்கநிகழ்ச்சிகளை கந்திலி கரிகாலன் தொகுத்து வழங்கினார்தியாகராயர் நகர் பி.பொன்னுரங்கம் நன்றியுரையாற்றினார்.




இந்நிகழ்ச்சியில் மும்பை புறநகர் திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஜெயினுல் ஆபிதீன்நெல்லை கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் ஏர்வாடி எஸ்..கே சித்திக்சேலம் ஓவியர் இராஜாமுனைவர் வாமுசே திருவள்ளுவன்சின்னமாத்தூர் மணிகண்டன்சூரியன் சக்தி திமுக தலைமை இலக்கிய அணி நிர்வாகிகள் உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் மற்றும் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் பலர்  பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
தி.மு.க. தலைமை இலக்கிய அணியின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற பேராசிரியர் சமீரா மீரான் மற்றும் அயலக தமிழறிஞர் விருந்து பெற்ற கவிஞர் தமிழ் நேசன் ஆகிய இருவருக்கும் ஜெரிமெரி தமிழ்ச் சங்கம் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. மும்பை புறநகர் தி.மு.க. முன்னாள் செயலாளர் பொ. அப்பாதுரை தலைமையில் நடைபெற்ற இப்பாராட்டு விழாவில் மும்பை புறநகர் தி.மு.க. செயலாளர் அலிசேக் மீரான், துணைச் செயலாளர் முனைவர் வதிலை பிரதாபன், இளைஞரணி மாநில அமைப்பாளர் ந. வசந்தகுமார், இலக்கிய அணித் தலைவர் வே. சதானந்தன், சங்க முன்னாள் தலைவர் பொ. வெங்கடாசலம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். ஜெரிமெரி தமிழ்ச் சங்க நிர்வாகிகள் கோ. சீனிவாசகம், அய்யாபிள்ளை உள்ளிட்டோர் மிகச்சிறப்பாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.


No comments:

Post a Comment