மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கநாள் கூட்டம்
மும்பை மாநில புறநகர் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கநாள் கூட்டம் விட்டல்வாடி உத்யோக் விகாரில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு இலக்கிய அணித்தலைவர் வே.சதானந்தன் தலைமை தாங்கினார்.
மும்பை மாநில புறநகர் திமுக துணைச்செயலாளர் கவிஞர் வதிலை பிரதாபன்
கலந்துகொண்டு வீரவணக்க சிறப்புரையாற்றினார்.
முன்னதாக டோம்பிவிலி கிளைச்செயலாளர் வீரை சோ. பாபு வரவேற்புரையாற்ற
அம்பர்நாத் கிளைச்செயலாளர் ஜஸ்டின், கல்யாண் தமிழ் நற்பணி மன்றத்தலைவர் ஆ.பரமசிவன் உள்ளிட்டோர் நினைவுரையாற்றினர்.மேலு பலர் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
பெருமாள், ஐயப்பன், வீரகுரு, ரகுநாதன், மதியழகன், சிவநாதன், அரசகுமார் உள்ளிட்டோர்
முன்னிலை வகித்தனர்.
No comments:
Post a Comment