Sunday, June 20, 2010

பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு மலர் வெளியீட்டு விழா

பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு மலர் வெளியீட்டு விழா
பொ. அப்பாதுரை, அலிசேக் மீரான் பங்கேற்பு

மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பாக பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு மலர் வெளியீட்டு விழா தாராவியில் சந்த க்கைய தாராவி கிராஸ் ரோடில் உள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. 2010 ,
ஜூன் 19 ,  சனிக்கிழமை மாலை 7 மணி அளவில் நடை பெற்ற இவ்விழாவில் மும்பை திராவிடர் கழகத்தின் மூத்த தலைவராக விளங்கிய மறைந்த திரு தொல்காப்பியனார் அவர்களின் மனைவி திருமதி இரத்தினம் தொல்காப்பினார் அவர்கள் மலரை வெளியிட, மும்பைப் புறநகர் திமுக செயலாளர் பொ. அப்பாதுரை மலரின் முதல் படியை பெற்றுக் கொண்டார்.   தி. மு. க.  தலைமைச்  செயற்குழு  உறுப்பினர்   அலிஷேக் மீரான்,  மும்பைப் புறநகர் திமுக அவைத்தலைவர்  கொ. வள்ளுவன், மும்பைப் புறநகர் திமுக பொருளாளர்  பி. கிருஷ்ணன்,
மும்பை டி. எம். எஸ். எம். என். நரசிம்மன் ஆர். டி. ராஜன் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் மன்ற நிர்வாக குழு தலைவர் திருமதி அமலா ஸ்டான்லி தலைமை உரை ஆற்ற அம்மன்றத்தின் செயலாளர் வதிலை பிரதாபன் வரவேற்புரை ஆற்றினார். எழுத்தாளர் மன்ற நிர்வாகிகளில் ஒருவரான கவிஞர் புதிய மாதவி மலரை பற்றிய அறிமுக உரையை நிகழ்த்தினார். இறுதியாக எழுத்தாளர் மன்றத்தின் மேலாண்குழு தலைவர் பேராசிரியார் சமீரா மீரான் நன்றி கூறினார். நிகழ்சிகளை எழுத்தாளர் மன்றப் பொருளாளர் அ. ரவிச்சந்திரன் தொகுத்து வழங்கினார்.

அண்ணா நூற்றாண்டு மலர் வெளியீட்டு விழாவை ஒட்டி நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சியில் பாவேந்தர் பாரதி தாசன், பாரதியார், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவிஞர் கண்ணதாசன் ஆகியோருடைய திரையிசைப் பாடல்களை பாடகர்கள் மிக சிறப்பாக பாடினார்கள்.

No comments:

Post a Comment