Friday, June 4, 2010

கலைஞர் பிறந்தநாள் விழா

03, 06, 2010
௦௦மும்பைப்  புறநகர் திமுக சார்பாக

முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா
சீத்தாகேம்பில் கோலாகலமாக நடைபெற்றது

தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு. கழகத்  தலைவருமான முத்தமிழ் அறிஞர்
டாக்டர் கலைஞர் அவர்களின் 87 வது பிறந்த நாள் விழா மும்பைப் புறநகர் திமுக சார்பாக 2010, ஜூன் 3, வியாழக் கிழமை, மாலை 7 மணியளவில் சீத்தாகேம்ப் திமுக அலுவலகமான தளபதி மு. க. ஸ்டாலின் மாளிகை கூட்ட அரங்கில் நடைபெற்றது. மும்பைப்  புறநகர் திமுக செயலாளர் பொ. அப்பாதுரை தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சீதாகேம்ப் திமுக கிளைச் செயலாளர் பி எஸ் இராமலிங்கம் தொடக்கவுரை நிகழ்த்தினார். திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் அலிசேக் மீரான், மும்பைப் புறநகர் திமுக துணைச் செயலாளர் பேராசிரியர் சமீரா மீரான், தலைமைக்  கழகப் பேச்சாளர் மேகராஜன், இலக்கிய அணிச் செயலாளர் கொ. வள்ளுவன், கவிஞர் குணா, தாராவி பால்துரை, பாண்டுப் டேவிட், டோம்பிவலி வீரை சோ. பாபு, கல்யான் வதிலை பிரதாபன், பாந்திரா பரமசிவம், கல்யான் சதானந்தன், திருவேங்கிடம், வை. நடராசன், ஷேக் சஹாபுதீன், கொளஞ்சியப்பன் உள்ளிட்ட பலர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களைப்  போற்றி, பாராட்டி உரை நிகழ்த்தினார்கள். செம்பூர் பி. கிருஷ்ணன், சயான் வளர்மணி, கோவண்டி ஜான் தாமஸ், பி. எம். சுலைமான்,காசிநாதன், எம். எ. காதர், அரசன், எம். முருகன், பாலமுருகன், ஷகீல் அஹமது உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.  இறுதியாக ப. உதயகுமார் நன்றியுரை நிகழ்த்தினார். முன்னதாக பாடகர் கான் முகம்மது திமுக கொள்கைப் பாடல்களைப் பாடினார். திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் அலிசேக் மீரான் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். .



படத்தில்: சீத்தகேம்பில் நடைபெற்ற கலைஞர் பிறந்தநாள் விழாவில்
பொ. அப்பாதுரை, அலிசேக் மீரான், சமீரா மீரான், கொ. வள்ளுவன், வதிலை பிரதாபன், பி. எஸ். ராமலிங்கம், ஷேக் சஹாபுதீன் உள்ளிட்டோர்.

No comments:

Post a Comment