உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் மும்பைப் புறநகர் திமுகவினர்
கோவையில் 2010, ஜூன் 23 முதல் 27 வரை நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் மும்பைத் தமிழ் பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர். மும்பைப் புறநகர் திமுக செயலாளர் பொ. அப்பாதுரை, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அலிசேக் மீரான், மும்பைப் புறநகர் திமுக அவைத் தலைவர் கொ. வள்ளுவன், மும்பைப் புறநகர் திமுக பொருளாளர் பி. கிருஷ்ணன், துணை செயலாளர் பேராசிரியர் சமீரா மீரான், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் எஸ். பி. முருகேசன், டோம்பிவலி திமுக பிரமுகர் வீரை சோ. பாபு, சீத்தகாம்ப் திமுக செயலாளர் பி. எஸ். இராமலிங்கம், அவைத் தலைவர் இல. நாராயணன், திருவேங்கடம், நேருல் சுலைமான். ஆகியோர் ஐந்து நாள் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு நேற்று மும்பை வந்து சேர்ந்தனர்.
வரலாற்று சிறப்பு மிக்க இம்மாநாட்டில் கலந்து கொண்டதை வாழ்நாளில் கிடைத்த பெரும் பேறாகக் கருதுவதாக அனைவரும் தெரிவித்தனர்.
படத்தில் - செம்மொழி மாநாட்டு வளாகத்தில் பொ. அப்பாதுரை, பேராசிரியர் சமீரா மீரான், கொ. வள்ளுவன், பி. கிருஷ்ணன், வீரை சோ பாபு, நேருல் சுலைமான் ஆகியோர்
மேலும் மும்பை தமிழ் சங்க நிர்வாகிகள் சரவணன், பரணி, ஜெரிமேரி தமிழ் சங்க தலைவர் வின்சென்ட் பால், துணை செயலாளர் இல. முருகன், உலகத் தமிழ் இலக்கிய பேரவை அமைப்பாளர் கவிஞர் அஞ்சாமை கதிரொளி, சேகர் சுப்பையா, ஆசிரியர் முத்தையா மற்றும் பல தமிழ் பிரமுகர்களும் உலகத் தமிழ் செம்ம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டனர்.
.
No comments:
Post a Comment