Tuesday, August 10, 2010

நிர்வாகக் குழுக் கூட்டம்

10. 08. 2010
மும்பைப்  புறநகர் திமுக சார்பாக

முப்பெரு விழா
நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு

மும்பை புறநகர் திமுக நிர்வாகக் குழுக் கூட்டம் கடந்த செவ்வாய் கிழமை ( ஆகஸ்ட் 10 ) மாலை 6 மணி அளவில் ஜோகேஷ்வரியில் அவைத் தலைவர் கொ. வள்ளுவன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மும்பை புறநகர் திமுக செயலாளர் பொ. அப்பாதுரை, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அலிசேக் மீரான், மும்பை புறநகர் திமுக பொருளாளர் பி. கிருஷ்ணன், துணை செயலாளர்கள் பேராசிரியர் சமீரா மீரான், வதிலை பிரதாபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மும்பை புறநகர் திமுக சார்பாக அடுத்த மாதம் முப்பெருவிழாவை மிக விமர்சையாக நடத்துவது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை புறநகர் திமுக செயலாளர் பொ. அப்பாதுரை தெரிவித்துள்ளார். மேலும் மும்பை வருகை தரவுள்ள திமுக சொத்துப் பாதுகப்பு குழு பிரதிநிதிகளை வரவேற்று
மும்பை வட்டாரத்தில் உள்ள கழக சொத்துகளை ஆய்வு செய்ய அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவது என்றும் மும்பை புறநகர் திமுக பொறுப்பில் உள்ள கோவண்டி, சீத்தாகேம்ப், ஜெரிமேரி, ஜோகேஸ்வரி, பொய்சர் ஆகிய கிளைக்கழக அலுவலக கட்டிடங்களை திமுக பொது செயலாளர் அவர்கள் பெயருக்கு மாற்றி பதிவு செய்ய ஏற்பாடு செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டதாகவும் மும்பை புறநகர் திமுக செயலாளர் பொ.  அப்பாதுரை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment