22. 08. 2010.
மும்பை புறநகர் தி. மு. க. சார்பாக
முரசொலி மாறன் பிறந்தநாள் விழா
சீத்தாகேம்பில் சனிக்கிழமை நடைபெற்றது
மும்பை புறநகர் திமுக, சீத்தாகேம்ப் கிளை சார்பாக முன்னாள் மத்திய
அமைச்சர் முரசொலி மாறனின் 76 வது பிறந்த நாள் விழா கடந்த சனிக்கிழமை, (ஆகஸ்ட் 22 ) மாலை 7 மணி அளவில் சீத்தாகேம்ப் திமுக அலுவலகமான தளபதி மு. க. ஸ்டாலின் மாளிகையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மும்பை நகர திமுக செயலாளர் த. மு. பொற்கோ தலைமை தாங்கினார். மும்பை புறநகர் திமுக செயலாளர் பொ. அப்பாதுரை, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அலிசேக் மீரான், பம்பாய் திருவள்ளுவர் மன்ற பொதுச் செயலாளர் வி. தேவதாசன், . மும்பை புறநகர் திமுக துணைச் செயலாளர் பேராசிரியர் சமீரா மீரான், பொருளாளர்
பி. கிருஷ்ணன், அ. கணேசன், ஜான் சாமுவேல், டோம்பிவலி வீரை சோ. பாபு, சீத்தகேம்ப் கிளை செயலாளர் பி. எஸ். இராமலிங்கம், பொய்சர் மூர்த்தி, டி. எம். எஸ். காதர், உட்பட பலர் முரசொலி மாறனின் சிறப்புகளை நினைவு கூர்ந்து உரையாற்றினார்கள். திமுக தலைமைப் பொதுக் குழு உறுப்பினர் அமல்ராஜ் மிக்கேல், சா. பொன்னம்பலம், , திருவேங்கடம், கொளஞ்சியப்பன் , செ. மு. கான், ஆழ்வார், பெரியசாமி, காசிநாதன், தென்மொழியன் உட்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர் முன்னதாக மதியழகன் வரவேற்புரையாற்ற, இறுதியாக
வே. இராஜேந்திரன் நன்றியுரையாற்றினார்
No comments:
Post a Comment