மும்பைப் புறநகர் திமுகவின்
மூத்த கழக உறுப்பினர்களுக்கு
தலைவர் கலைஞர் நிதிஉதவி
மும்பைப் புறநகர் திமுக ஆரே காலணி கிளைச் செயலாளர் கு. தர்மலிங்கம், காட்கோபர் கிளைச் செயலாளர் ஷேக் சஹாபுதீன் ஆகிய இருவருக்கும் அவர்களின் வருவாய் அற்ற குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு திமு கழக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தமது 'கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை' மூலமாக தலா ரூபாய் பத்தாயிரம் நிதிஉதவி வழங்கி உள்ளார். மும்பையில் நடைபெற்ற விழா ஒன்றில் கிளைக் கழகச் செயலாளர்கள் முன்னிலையில் கு. தர்மலிங்கம், ஷேக் சகாபுதீன் ஆகியோரிடம் நிதிக்குரிய காசோலையை மும்பைப் புறநகர் திமுக செயலாளர் பொ. அப்பாதுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அலிஷேக் மீரான், இலக்கிய அணிச் செயலாளர் கொ வள்ளுவன், மும்பை புறநகர் திமுக துணைச் செயலாளர் பேராசிரியர சமீரா மீரான், செம்பூர் கிருஷ்ணன், கல்யாண் வதிலை பிரதாபன், சயான் வளர்மணி, அம்பர்நாத் கதிர்வேல், டோம்பிவலி வீரை சோ. பாபு, சீத்தகாம்ப் இராமலிங்கம், தானா தனுஷ்கோடி, வாஷி நாக்கா முகமது சலீம், இல நாராயணன், ப. உதய குமார், முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
vaazthukkaL
ReplyDeleteanbudan,
puthiyamaadhavi