Wednesday, August 25, 2010

டி. கே. எஸ். இளங்கோவன் அவர்களுடன் சந்திப்பு


மும்பைப் புறநகர் திமுகவினர்   நாடாளுமன்ற உறுப்பினர் 
டி. கே. எஸ். இளங்கோவன் அவர்களுடன் சந்திப்பு 
மும்பை புறநகர் திமுகவினர் நாடாளுமன்ற உறுப்பினர்  டி. கே. எஸ். இளங்கோவன் அவர்களை சென்னையில் தி. மு. கழகத்தின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில்
சந்தித்தனர்.   அப்போது மும்பைத் தமிழர்களின் இரயில் போக்குவரத்து பிரச்சினை குறித்து ஒய்வு பெற்ற ரயில்வே தமிழதிகாரிகள் தயாரித்த ஆய்வறிக்கையை மத்திய இரயில்வே துறை அமைச்சக ஆலோசனைக்குழு உறுப்பினரும் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான டி. கே. எஸ். இளங்கோவன் அவர்களிடம்  மும்பைப் புறநகர் திமுக செயலாளர் பொ. அப்பாதுரை வழங்கினார்  .
            தி. மு. க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் அலிஷேக் மீரான், மும்பைப் புறநகர் திமுக துணைச் செயலாளர் பேராசிரியர் சமீரா மீரான், அவைத்தலைவர் எஸ். பி. முருகேசன், இலக்கிய அணிச் செயலாளர் கொ. வள்ளுவன் ஆகியோர் உடன் இருந்தனர் . 

No comments:

Post a Comment