Sunday, December 31, 2017

பாண்டுப் இளைஞரணி தொடக்கவிழா



பாண்டுப் கிளை திமுக இளைஞரணி தொடக்கவிழா 
மற்றும்
2018ஆம் ஆண்டு நாள்காட்டி வெளியீட்டு விழா
அலிசேக் மீரான் சிறப்புரையாற்றினார்
மும்பை புறநகர் தி.மு.க. பாண்டுப் கிளை இளைஞரணி தொடக்க விழாவும் 2018  புத்தாண்டு நாள்காட்டி வெளியீட்டு விழாவும் பாண்டுப்பில் உள்ள பம்பாய் திருவள்ளுவர் மன்றத்தின் பிரைட் மேனிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது,


பம்பாய் திருவள்ளுவர் மன்றத்தலைவரும், பாண்டுப் திமுக வின் மேலமைப்புப் பிரதிநிதியுமான ஜேம்ஸ் தேவதாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மும்பை புறநகர் திமுக செயலாளர் அலிசேக் மீரான் சிறப்புரையாற்றினார்
பாண்டுப் கிளைச் செயலாளர் கு.மாரியப்பன் வரவேற்புரையாற்ற, தி.மு.க. இளைஞரணி மும்பை மாநில அமைப்பாளர் ந. வசந்தகுமார் தொடக்கவுரையாற்றினார். மும்பை புறநகர் திமுக பொருளாளர் பி. கிருஷ்ணன்,  துணைச் செயலாளர் பேராசிரியர் சமீரா மீரான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்


பாண்டுப் கிளை இளைஞரணி அமைப்பாளர் அனந்தகுமார் உள்ளிட்ட இளைஞரணி தோழர்களை மாநில இளைஞரணி அமைப்பாளர் அறிமுகம் செய்து வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் மும்பை புறநகர் திமுகவின் 2018ஆம் ஆண்டுக்கான நாள் காட்டி வெளியிடப்பட்டது. மும்பை புறநகர் திமுக முன்னாள் அவைத் தலைவர் வி. தேவதாசன் நாள்காட்டியை வெளியிட முன்னாள் செயலாளர் பொ. அப்பாதுரை பெற்றுக்கொண்டார்.
மும்பை புறநகர் திமுகவின் 20 ஆண்டுகள் நிறைவு விழாவை முன்னிட்டு நினைவுப்பரிசுகள் இவ்விழாவில் வழங்கப்பட்டன. தொடக்ககால நிர்வாகிகளான வி.தேவதாசன், பொ.அப்பாதுரை, அலிசேக் மீரான் ஆகியோருக்கு முறையே எஸ்.பி. செழியன், பேராசிரியர் சமீரா மீரான், பி. கிருஷ்ணன் ஆகியோர் நினைவுப் பரிசுகளை வழங்கினர்.
நிகழ்ச்சிகளை மும்பை புறநகர் திமுக இலக்கிய அணிச் செயலாளர் கவிஞர் வ. இரா. தமிழ்நேசன் தொகுத்து வழங்க, பாண்டுப் கிளைத் துணைச் செயலாளர் சேர்மன்துரை நன்றியுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் இலக்கிய அணி தலைவர் வே. சதானந்தன், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இரா. கணேசன், யோவான், க. மூர்த்தி,  பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளர் கவிஞர் நெல்லை பைந்தமிழ், கிளைக்கழக நிர்வாகிகள் மெஹ்பூப் பாட்சா சேக், முகமதலி, பேராசிரியர் சம்பத், ஆ. பாலமுருகன், சு. பெருமாள், ச. .பழனி, சக்திவேல், மாடசாமி, ரவி அர்ஜுன், உதய் பால முருகன், ஆர். இரவி, அய்யாவு,  பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ. இரவிச்சந்திரன், ஆ. பாலசுப்பிரமணியன்,  அணுசக்திநகர் கலை மன்றச் செயலாளர் பு. தேவராஜன், பாண்டுப் கிளை நிர்வாகிகள் செபஸ்டின்,  முத்துகிருஷ்ணன், சதாசிவம், உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.
மும்பை புறநகர் கழகத்தினர் க. டேவிட் , பேராசிரியர் குமார செல்வன், பேலஸ்துரை, ஆபிதீன் சேக், பி. ஜெயக்குமார், முருகேஷ், மதியழகன்,  எஸ். வேல்முருகன்,  மணிகண்டன், வே. குமாரவேல், வி. சங்கர், மு. பாபு, எஸ். பாஸ்கர், எஸ்.கணபதி, சுரேஷ், மேகநாதன், குமார், மணி, சுபேந்திரன், அஜந்தா, சதீஷ்குமார், தினேஷ்குமார், எஸ். பி. சுவாமி, ரமேஷ், கந்தசாமி, பி.பாலசுப்பிரமணியன், செல்வன், பன்னீர்செல்வம், செந்தில்குமார் உள்ளிட்ட மும்பைத் தமிழன்பர்கள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.   



Monday, November 20, 2017

முலுண்ட் இளைஞரணி


மும்பை புறநகர் மாநிலமுலுண்ட் கிளைக் கழக இளைஞரணி உதயம்

******************++++++++++****""""""*+++++++++
மும்பை புறநகர் மாநில தி.மு.கழகத்தின் சார்பாக முலுண்ட் வித்யா மந்திர் பள்ளியில் முலுண்ட் கிளைக் கழகத்தின் இளைஞரணி துவக்க விழா நடைபெற்றது.
மும்பை .புறநகர தி.மு.க. செயலாளர் அலிசேக்மீரான் மீரான்  தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மும்பை மாநில தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்தகுமார் மற்றும் மும்பை .புறநகர தி.மு.க. பொருளாளர் பி. கிருஷ்ணன், துணைச் செயலாளர்கள் பேராசிரியர் சமீரா மீரான், முனைவர் வதிலை பிரதாபன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முலுண்ட் பகுதியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் தங்களை திமுக இளைஞரணியில் இணைத்துக் கொண்ட . இவ்விழாவில் முலுண்ட் கிளை இளைஞரணி அமைப்பாளராக பால. உதயகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


முலுண்ட் கிளைச் செயலாளர் சு. பெருமாள் வரவேற்புரையாற்ற, மேலமைப்புப் பிரதிநிதி ச. சுப்பிரமணியன் தொடக்கவுரையாற்றினார்.  இளைஞரணி அமைப்பாளர் ந. வசந்தகுமார், இலக்கிய அணி அமைப்பாளர் வ. இரா. தமிழ்நேசன், பாண்டுப் கிளைச் செயலாளர் கு. மாரியப்பன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
இலக்கிய அணித் தலைவர் வே. சதானந்தன், புரவலர் சோ.பா. குமரேசன், இளைஞரணி துணை அமைப்பாளர் இரா. கணேசன், மால்வானி எஸ். பி. செழியன்,  பிவாண்டி மெஹ்பூப் பாட்சா, பேராசிரியர் சம்பத், முத்தமிழ் தண்டபாணி, தானே பாலமுருகன், வாசி தில்லை, வாசி பி. ஆறுமுகம், முலுண்ட் கிளை அவைத் தலைவர் ரவி அர்ஜுன், துணைச் செயலாளர்கள் மா. சக்திவேல் மாடசாமி, ஆ. பாலசுப்பிரமணியன், தமிழரசன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர்.
மேலும் எம். இசக்கிமுத்து,  எஸ். இரகுநாதப் பெருமாள், மா. முருகன், பி. நம்பி, வி. சங்கர், ஆர். சக்திவேல், அப்துல் லத்தீப் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இறுதியாக முலுண்ட் கிளை இளைஞரணி அமைப்பாளர் பால. உதயகுமார் நன்றி கூறினார்.




Sunday, November 12, 2017

மகளிரணி கலந்தாய்வு


மகளிரணி கலந்தாய்வுக் கூட்டம்

மும்பை புறநகர் தி.மு.. சார்பாக மகளிரணி கலந்தாய்வுக் கூட்டம்
அலிசேக் மீரான் முன்னிலையில்
பிரச்சார குழுச் செயலாளர் நளினி சாரங்கன் பங்கேற்பு

மும்பை புறநகர் தி.மு.. சார்பாக மகளிரணி கலந்தாய்வுக் கூட்டம் மும்பை ஜுஹு பகுதியில் நடைபெற்றதுமும்பை புறநகர் தி.மு.. செயலாளர் அலிசேக் மீரான் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தி.மு.. தலைமை நிலைய மாநில பிரச்சார குழுச் செயலாளர் திருமதி. நளினி சாரங்கன் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்
தன்னுடைய கருத்துரையில் தி.மு.கழகம் பெண்களின் முன்னேற்றத்திற்கு ஆற்றிய அரும்பணிகள் குறித்தும், தி.மு.கழத்தில் பெண்களின் பங்களிப்பு குறித்தும் சிறப்பாகப் பேசினார்மும்பை புறநகர் தி.மு.. மகளிரணியினர் விமலா இளங்கோ, அபிராமி வசந்த், நாக ஜோதி ராஜகுமாரன், தீபா கணேசன், அபிதா மீரான்சைபுன்னிசா, ஜெஸ்மின் சமீர் உள்ளிட்ட மகளிர் அணியினர் இக்கலந்தாய்வில் கலந்து கொண்டனர்


முன்னதாக திருமதி நளினி சாரங்கனுக்கு மும்பை புறநகர் தி.மு.. சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மகளிர் அணியினருடன் மும்பை புறநகர் தி.மு.. செயலாளர் அலிசேக் மீரான் , பொருளாளர் பி. கிருஷ்ணன், துணைச் செயலாளர்கள் பேராசிரியர் சமீரா மீரான், முனைவர் வதிலை பிரதாபன், இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் . இரா. தமிழ்நேசன், இளைஞரணி மாநில அமைப்பாளர் . வசந்த குமார், இலக்கிய அணித்  தலைவர் வே. சதானந்தன், பொருளாளர் . உதயகுமார், இளைஞரணி துணை அமைப்பாளர் இரா. கணேசன், முலுண்ட . சுப்பிரமணியன், ஜெரிமெரி கிளைச் செயலாளர் பொ. . இளங்கோபிவாண்டி கிளைச் செயலாளர் மெஹ்பூப் பாட்சா, பொருளாளர் முஸ்தாக் அலி உள்ளிட்டோர் இவ்வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

முன்னதாக மகளிரணி கூட்டத்தில் பங்கேற்க மும்பை வருகை தந்த தி.மு.. தலைமை நிலைய மாநில பிரச்சார குழுச் செயலாளர் திருமதி. நளினி சாரங்கன் அவர்களை மும்பை புறநகர் தி.மு.. செயலாளர் அலிசேக் மீரான் மற்றும் புறநகர் தி.மு.. வின் மகளிரணியினர் விமலா இளங்கோ, அபிராமி வசந்த், நாக ஜோதி ராஜகுமாரன், தீபா கணேசன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்







Thursday, November 2, 2017

கலந்தாய்வுக் கூட்டம்

மும்பை புறநகர் திமுக கலந்தாய்வுக் கூட்டம்முலுண்டில் நடைபெற்றது


மும்பை புறநகர் தி.மு.. கலந்தாய்வுக் கூட்டம் செயலாளர் அலிசேக் மீரான் தலைமையில் முலுண்ட் மேற்கு வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மும்பையில் தி.மு.கழகத்திற்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கவும் மற்றும் புதுப்பிக்கவும் நிரப்பப்பட்ட விண்ணப்பப படிவங்களை செயலாளர் பிற நிர்வாகிகளிடமிருந்து பெற்றுக் கொண்டார். இக்கூட்டத்தில் மும்பை புறநகர் தி.மு.. துணைச் செயலாளர்கள்  பேராசிரியர் சமீரா மீரான், முனைவர் வதிலை பிரதாபன்

இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் வ. இரா தமிழ்நேசன், இளைஞரணி மாநில அமைப்பாளர் ந. வசந்தகுமார்,  துணை அமைப்பு நிர்வாகிகள்  வே. சதானந்தன், ப. உதயகுமார், சோ. பா. குமரேசன்,  கிளைக்கழக நிர்வாகிகள் ச. சுப்பிரமணி, , முகமதலி, முஸ்தாக் அலி, கு. மாரியப்பன், பொ. அ. இளங்கோ, ஆ. பாலமுருகன், சு.பெருமா,ள், மா. சக்திவேல், பெ. ஆழ்வார், அ. இரவி, வி. தில்லை, பி. ஆறுமுகம்,  முத்து கிருஷ்ணன், த. விஜயகுமார், இராஜா சேவியர், எம். இரவி, மாடசாமி,  பி. சேகர், மதியழகன், ப. வள்ளிநாயகம், அப்துல் லத்திப், உதய் பாலமுருகன், சு. தமிழரசன், ந. சக்திவேல்,  மாணிக்கம் உள்ளிட்ட தி.மு..வினர் கலந்து கொண்டனர்


Friday, October 13, 2017

நிர்வாகிகள் கூட்டம்

மும்பை புறகா தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் 
மும்பை புறநகர் திமுக நிர்வாகிகள் கூட்டம்   செயலாளர் அலிசேக் மீரான்  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டம் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது. 
மும்பை புறநகர் திமுக நிர்வாகிகள் கூட்டம் 12.10.2017 அன்று மாலை 7 மணியளவில்  செயலாளர் அலிசேக் மீரான்  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்  உறுப்பினர் சேர்க்கை - புதுப்பித்தலை விரைவு படுத்த வேண்டியும் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட க. ஆறுமுகப் பாண்டியன் மீது தி.மு.க. தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதை வரவேற்றும்  தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம்:- 1.
கழகப் பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர்களின் ஆணைப்படி மும்பை மாநில புறநகர் பகுதிகளில் உறுப்பினர்கள் சேர்க்கவும் புதுப்பிக்கவும் அந்தந்த பகுதிகளில் உள்ள கிளைக்க கழக அமைப்பாளர்களிடன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு தேவையான அளவு விண்ணப்ப படிவங்களும் வழங்கப்பட்டுள்ளன. உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் பணியை விரைந்து முடித்திட புறநகர் கழக நிர்வாகிகளும் மூத்த கழக உறுப்பினர்களும் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தீர்மானம்: 2.
மும்பை புறநகர் தி.மு.க இலக்கிய அணியின் அவைத்தலைவராக இருந்த திரு. க. ஆறுமுகப் பாண்டியன் புறநகர் தி.மு.க. நிர்வாகிகள் குறித்து  தொடர்ந்து முகநூலில் அவதூறு பரப்பி வந்ததால், இலக்கிய அணி அவைத் தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நடவடிக்கைக்குப் பிறகும் அவர் திருந்தவில்லை.   பம்பாய் திருவள்ளுவர் மன்றம் சார்பாக நடைபெற்ற திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் கழகச் செயல் தலைவர் தளபதி அவர்கள்  கலந்து கொண்டு திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து விழா பேருரை நிகழ்த்தினார். இவ்விழா குறித்தும், விழாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த  புறநகர் திமுக செயலாளர் குறித்தும் இளைஞர் அணி மாநில அமைப்பாளர் மற்றும் பிற நிர்வாகிகள் குறித்தும் ஆறுமுகப் பாண்டியன்  மீண்டும் அவதூறுகளைப் பரப்பினார்.
புறநகர் தி.மு.க. நிர்வாகிகள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு  அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்பி தி.மு.கழகத்திற்கு களங்கம் ஏற்படுத்திய க. ஆறுமுகபாண்டியன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு   கழக உறுப்பினர் பொறுப்பிலிருந்து கழகப் பொதுச் செயலாளர் அவர்களால்  தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
தனது அடாவடித்ததனத்தால் புறநகர் தி.மு.க. நிர்வாகத்திற்கு இடையூறுகள் செய்ததோடு தி.மு.கழகத்தின் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்திய க. ஆறுமுகப் பாண்டியன் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கையை கழகப் பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் எடுத்துள்ளார். இந்நடவடிக்கையை மும்பை  மாநில புறநகர் கழகம் முழுமனதுடன் வரவேற்கிறது.


தீர்மானம்: 3.
01. 10. 17 அன்று நடைபெற்ற முப்பெரு விழா நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக திட்டமிட்டு வெற்றிகரமாக நடத்திக் காட்டிய மும்பை புறநகர் தி.மு.க. இலக்கியணி அமைப்பாளர் மற்றும் நிர்வாகிகள், உறுதுணையாக இருந்து விழாவின் வெற்றிக்கு உழைத்த பிற நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவருக்கும் இந்நிர்வாகக்குழு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது

இத்தீர்மானங்கள் அனைத்தும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Wednesday, October 4, 2017

இலக்கிய அணி சார்பாக முப்பெரு விழா

மும்பை புறநகர்  தி.மு.க  இலக்கிய அணி சார்பாக  
முப்பெரும் விழா
தஞ்சை கூத்தரசன் , கந்திலி கரிகாலன் பங்கேற்பு
மும்பை புறநகர் மாநில தி.மு.க இலக்கிய அணி சார்பாக முப்பெரும்விழா  மும்பை, மாதுங்கா பகுதியில் உள்ள குஜராத் சமாஜ் குளிரரங்கில்நடைபெற்றது.
 தலைமைக் கழக  மாநில இலக்கிய அணிச் செயலாளர்  கவிஞர் தஞ்சைகூத்தரசன், தலைமைக் கழகப் பேச்சாளர் கந்திலி கரிகாலன் ஆகியோர்சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற இவ்விழாவில் மும்பை புறநகர்மாநில தி.மு.க இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர்  வ.இரா.தமிழ்நேசன்  தலைமை தாங்கினார். பொருளாளர்  ப.  உதயகுமார் வரவேற்புரைஆற்ற. மும்பை மாநில இளைஞரணி அமைப்பாளர்  ந. வசந்த குமார்தொடக்கவுரை நிகழ்த்தினார்.
மும்பை புறநகர் மாநில தி.மு.க செயலாளர் அலிசேக் மீரான் தந்தைபெரியார் திருவுருவப் படத்தையும், மும்பை மாநகர தி.மு.க.பொறுப்பாளர் கருவூர். இரா. பழனிச்சாமி  பேரறிஞர் அண்ணா  திருவுருவப்படத்தையும் திறந்து வைத்து உரை நிகழ்த்தினார்கள்..
 விழாவில் மும்பை புறநகர் மாநில கிளைக் கழக நிர்வாகிகளிடம் கழக உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தலுக்கான தலைமைக் கழக விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது.
விழா பேருரை நிகழ்த்திய தலைமைக் கழக  மாநில இலக்கிய அணிச்செயலாளர்  கவிஞர் தஞ்சை கூத்தரசன் கழக வரலாற்றுச் செய்திகளைமிகச் சிறப்பாகத் தொகுத்துக் கூறினார்
சிறப்புரை ஆற்றிய தலைமைக் கழகப் பேச்சாளர் கந்திலி கரிகாலன்முப்பெரு விழா சிறப்புகளோடு தமிழகத்தின் நிகழ்கால அரசியலையும்நகைச்சுவையோடு எடுத்துக் கூறி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.



மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ. கணேசன்,  புறநகர்  தி.மு.கதுணைச் செயலாளர்கள்
பேராசிரியர் சமீரா மீரான்,  முனைவர் வதிலை  பிரதாபன் ஆகியோர்முறையே, ’தந்தை பெரியார்”, ’பேரறிஞர் அண்ணா”, ”தி.மு.கழகம்”  என்றதலைப்புகளில் கருத்துரை வழங்கினர்.
ஆதிதிராவிட மகாஜன சங்கத் தலைவர்  க. வ. அசோக்குமார், பம்பாய் திருவள்ளுவர் மன்றத் தலைவர் ஜேம்ஸ் தேவதாசன்,  மாநிலஇளைஞரணி துணை அமைப்பாளர் இரா.கணேசன், மும்பை திமுகமாறன் ஆரிய சங்காரன்,  இந்தியப் பேனா நண்பர் பேரவைத் தலைவர்மா.கருண்,  மால்வாணி  எஸ்.பி. செழியன் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.



இக்கூட்டத்தில் திமுக செயல் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் கலந்துகொண்ட திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடுசெய்து நடத்திய பம்பாய் திருவள்ளுவர் மன்றத் தலைவர் ஜேம்ஸ்தேவதாசனுக்கும், மும்பை இரயில் பயணிகளின் நலனுக்காக சிறப்பாகசெயல் பட்டு வரும் தமிழின இரயில் பயணிகள் சங்கச் செயலாளர் டி.அப்பாதுரைக்கும் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மும்பை புறநகர்  தி.மு.க பொருளாளர் பி.கிருஷ்ணன், மும்பை தி.மு.கஇலக்கிய அணி அமைப்பாளர் ஜான் சாமுவேல் , மும்பை புறநகர்  தி.மு.ககலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளர் பாவலர் நெல்லைபைந்தமிழ், தாராவி திமுக மேனாள் செயலாளர் என். வி. சண்முகராசன்,இலக்கிய அணி புரவலர் கவிஞர் இரஜகை நிலவன், பிவாண்டி கிளைச் செயலாளர் மெஹ்பூப் பாட்சா, இலக்கிய அணி துணை அமைப்பாளர்தமிழின நேசன், கோரேகாவ் கிளை இலக்கிய அணி  அமைப்பாளர் எ.அண்ணாதுரை, பாண்டூப் கிளைச் செயலாளர் கு. மாரியப்பன் ஆகியோர்வாழ்த்துரை வழங்கினர்.
மும்பை புறநகர்  தி.மு.க இலக்கிய அணித் தலைவர்  வே.சதானந்தன்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, இலக்கிய அணி துணைச் செயலாளர் வெ.அ. ஜெய்னுல்ஆப்தீன்நன்றியுரை ஆற்றினார்.
 முன்னதாக மும்பை இரயில் நிலைய நடை மேம்பால  கூட்ட நெரிசலில்உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
அ.இரவிச்சந்திரன்,  ந. வளர்மணி, வீரை.சோ.பாபு,  பணகுடிசண்முகவேல், சா.பொன்னம்பலம், கோ.சீனிவாசகம், பு.தேவராஜன், டி.அப்பாதுரை, க.மூர்த்தி,  ஜான் வர்கீஸ், , பேராசிரியர் சம்பத்,  இரவிஇரஜினி, இராஜா சேவியர்,    முஸ்தாக் அலி, எஸ்.பெர்லின்,  பெ.ஆழ்வார், ஆ.பாலமுருகன், க.இராஜன், அ.அருணாசலம், ஆ. பாலசுப்ரமணியம் ,  சு.பெருமாள், அ.வேலையா, அ.இரவி, செய்யது அலி, மா.சக்திவேல்,சேர்மன் துரை,  நம்பி, வே.இராஜேந்திரன், ஆறுமுகம், தில்லை,தமிழரசன், மாடசாமி, சி.இராமசாமி, மு.பால்ராஜ், அ. பாஸ்கர்,  க.மரியதாசன், என். சேர்மன்  துரை,  எம். சேகர், த. நல்லையா, குமார், ச. முருகன், இரா. மதியழகன், ஆர். கிருஷ்ண மூர்த்தி, க. அண்ணதுரை, சி, இராமசாமி, இரவி, மகா கிருபனந்தம், அ. கண்ணன், வாசி.பி.ஆறுமுகம், வி.தில்லை, ச. மாடசாமி, சு. செந்தில்குமார், ச. பிரவிண் குமார், பி.மணி பாஸ்கர், சி. பழனிச்சாமி, சு.பெருமாள், எ.இரவி , மு.சங்கர், திருமதி. சசி அருணாசலம், க.இராசன், எம்.சண்முகவேல், தே. ஸ்டீபன்  ஜெபராஜ், ஏ.ஜெ. இரஷீத் அலி, ஷாஜஹான், முருகானந்தம், கு.மாரியப்பன், முத்துமாணிக்கம், சையத் ரபி, பி. சேவியர், களயன், வே.இராஜேந்திரன், வி.முனியன், இராமச்சந்திரன், சுரேஷ், சரவணன், இரா. தியாகராஜன், வெ .பிரசாந்த். உள்ளிட்ட  மும்பை  தமிழ்ப்பிரமுகர்கள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை மும்பை புறநகர் தி. மு.க. இலக்கிய அணியினர் மிகச்சிறப்பாக செய்திருந்தனர்.