Wednesday, December 29, 2010

அலி சேக் மீரான் இல்லத் திருமணம்

மாண்புமிகு   தமிழக துணைமுதல்வர்
மு. க. ஸ்டாலின் தலைமையில்மும்பை அலி சேக் மீரான் இல்லத் திருமணம் நெல்லை ஏர்வாடியில்
மிக பிரமாண்டமாக  நடைபெற்றது  

நெல்லை மாவட்ட மூத்த திமுக தலைவர்களில் ஒருவரான ஆ. மீ. அலிசேக் மன்சூர் அவர்களின் பேரனும் மும்பை புறநகர் திமுக வின் முதுகெலும்பாய் விளங்கும் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும், மும்பை தொழிலதிபருமான அலிசேக்  மீரான் அவர்களின் மகனுமான இம்ரான் மன்சூர் - ஆயிஷா பினாக்கி ஆகியோரின் திருமணம் மாண்புமிகு   தமிழக துணைமுதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் கடந்த  சனிக்கிழமை (டிச 25 , 2010  ) அன்று நெல்லை ஏர்வாடி மாஸ்டர் மஹால்  திருமண  அரங்கில்   நடைபெற்றது.   

இம்மணவிழாவில்  சட்டப்பேரவை தலைவர் மாண்புமிகு  இரா. ஆவுடையப்பன் .  நெல்லை மாவட்ட திமுக செயலாளர் வீ. கருப்பசாமிபாண்டியன், மாண்புமிகு தமிழக அமைச்சர்கள் டி. பி. எம். முகைதீன்கான், கே. கே. எஸ். எஸ். இராமச்சந்திரன்,  பூங்கோதை ஆலடி அருணா,  நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி, கே. எஸ். இளங்கோவன்,  இராம சுப்பு, ஜெயதுரை,  மாநிலங்களவை உறுப்பினர்கள் , இராதிகாசெல்வி, தங்கவேலு, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தகுமார், மாலைராஜா, எஸ்.ஆர். இராஜா, மு. அப்பாவு, அனிதா இராதா கிருஷ்ணன். திமுக பிரமுகர்கள அ. இரகுமான்கான், ஆயிரம்  விளக்கு உசேன், முனைவர் மு. பி. மணிவேந்தன், நெல்லை மேயர் ஏ. எல். சுப்பிரமணியம்,   கா. முத்துராமலிங்கம், மும்பை புறநகர் திமுக செயலாளர்  பொ. அப்பாதுரை,  சுப. சீத்தாராமன், பத்தமடை பரமசிவம் இரா. பிரபாகரன், ஜான்சன் துரை, மு. அயுப்கான் உட்பட பலர் முன்னிலை வகித்து மணமக்களை வாழ்த்தினார்கள் , சித்திக் வரவேற்புரை ஆற்றினார்.
கவிஞர் அறிவுமதி, திராவிடர் கழக நிர்வாகி ம. தயாளன், மும்பை நகர்,  புறநகர் பகுதி திமுக நிர்வாகிகள் த. மு. ஆரியசங்காரன்,  பேராசிரியர் சமீராமீரான், கொ. வள்ளுவன், , எஸ். பி. முருகேசன்,  வதிலை பிரதாபன், நங்கை குமணன், வீரை சோ. பாபு, டி. எம். முகைதீன், பி. எஸ். இராமலிங்கம், கி தன்ஷ்கோடி, இல நாராயணனன், அல்லா பிச்சை, சதானந்தன், தமிழ் இலெமுரியா ஆசிரியர் சு. குமணராசன், விட்டல்வாடி பரமசிவம், நெல்லை மாவட்ட கழக நிர்வாகிகள் எம். கிரகாம்பெல், ஜே. இராஜம் ஜான், ஆவின் ஆறுமுகம்,அ. சேக்தாவுத், மு. முத்துராமலிங்கம், நவநீதன், எஸ். எஸ். மைதீன், த. சீனியம்மாள், மு. உமா மகேஸ்வரி,எம். எஸ். எஸ். ஜார்ஜ் கோசல், இ. வேலு, சே சிவசங்கரன், எஸ். முருகன், எஸ். முத்துகிருஷ்ணன், ஏ. எஸ். ஏ. கருணாகரன், கா.மு. அப்பாஸ், மு. அசன் மீரான், சென்ட்ரல் சுலைமான், எஸ். கே ஜபருல்லா, உறவினர்கள், நண்பர்கள்  உட்பட ஏராளமானோர் பெருந்திரளாக இத் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.
திருமண வாழ்த்தரங்கத்தில் அ. மீரான் அவர்களின் தந்தையார் வரவேற்புரையாற்ற, நிறைவாக அ. மீரான் அனைவருக்கும் நன்றி கூறினார். . 

Friday, August 27, 2010

மும்பையிலிருந்து தி. மு. க. செய்திகள்

மும்பையிலிருந்து தி. மு. க. செய்திகள்:
வணக்கம்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் தலைமையில், கழக முன்னணியினரின் வழிகாட்டுதல்படி,  மும்பையில் திராவிட இயக்க உணர்வுகள் செழித்தும் நிலைத்தும் நிற்க அரும்பணி ஆற்றிவரும் தி. மு. கழகத்தின் சார்பாக மும்பைப்  புறநகர் பகுதிகளில் நிகழ்ந்து வரும் கழக நிகழ்வுகளும், பிற  பொது நிகழ்வுகழும் குறித்த செய்திகளை உலக மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில் இதனைத்  தொடங்கியுள்ளோம்.  .
சமீரா மீரான் (துணைச் செயலாளர்),
செய்தித் தொடர்பாளர், 
தி. மு. க., மும்பை புறநகர்

Wednesday, August 25, 2010

தலைவர் கலைஞருடன் சந்திப்பு


தமிழக முதல்வர் கலைஞர் அவர்களை மும்பை புறநகர் திமுக செயலாளர் பொ. அப்பாதுரை, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அலி ஷேக் மீரான், காங்கிரஸ் பிரமுகர்கள் அண்ணாமலை, லலிதா அண்ணாமலை ஆகியோர் சந்தித்தபோது எடுத்த படம் 

டி. கே. எஸ். இளங்கோவன் அவர்களுடன் சந்திப்பு


மும்பைப் புறநகர் திமுகவினர்   நாடாளுமன்ற உறுப்பினர் 
டி. கே. எஸ். இளங்கோவன் அவர்களுடன் சந்திப்பு 
மும்பை புறநகர் திமுகவினர் நாடாளுமன்ற உறுப்பினர்  டி. கே. எஸ். இளங்கோவன் அவர்களை சென்னையில் தி. மு. கழகத்தின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில்
சந்தித்தனர்.   அப்போது மும்பைத் தமிழர்களின் இரயில் போக்குவரத்து பிரச்சினை குறித்து ஒய்வு பெற்ற ரயில்வே தமிழதிகாரிகள் தயாரித்த ஆய்வறிக்கையை மத்திய இரயில்வே துறை அமைச்சக ஆலோசனைக்குழு உறுப்பினரும் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான டி. கே. எஸ். இளங்கோவன் அவர்களிடம்  மும்பைப் புறநகர் திமுக செயலாளர் பொ. அப்பாதுரை வழங்கினார்  .
            தி. மு. க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் அலிஷேக் மீரான், மும்பைப் புறநகர் திமுக துணைச் செயலாளர் பேராசிரியர் சமீரா மீரான், அவைத்தலைவர் எஸ். பி. முருகேசன், இலக்கிய அணிச் செயலாளர் கொ. வள்ளுவன் ஆகியோர் உடன் இருந்தனர் . 

கலைஞர் நிதி உதவி

மும்பைப்  புறநகர் திமுகவின்

மூத்த கழக உறுப்பினர்களுக்கு
தலைவர் கலைஞர் நிதிஉதவி

மும்பைப் புறநகர் திமுக ஆரே காலணி கிளைச் செயலாளர் கு. தர்மலிங்கம், காட்கோபர் கிளைச் செயலாளர் ஷேக் சஹாபுதீன் ஆகிய இருவருக்கும் அவர்களின் வருவாய் அற்ற குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு திமு கழக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தமது 'கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை' மூலமாக தலா ரூபாய் பத்தாயிரம் நிதிஉதவி வழங்கி உள்ளார். மும்பையில் நடைபெற்ற விழா ஒன்றில் கிளைக்  கழகச்  செயலாளர்கள் முன்னிலையில் கு. தர்மலிங்கம், ஷேக் சகாபுதீன் ஆகியோரிடம் நிதிக்குரிய காசோலையை மும்பைப் புறநகர் திமுக செயலாளர் பொ. அப்பாதுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அலிஷேக் மீரான், இலக்கிய அணிச்  செயலாளர் கொ வள்ளுவன், மும்பை புறநகர் திமுக துணைச்  செயலாளர் பேராசிரியர சமீரா மீரான், செம்பூர் கிருஷ்ணன், கல்யாண் வதிலை பிரதாபன், சயான் வளர்மணி, அம்பர்நாத்  கதிர்வேல், டோம்பிவலி வீரை சோ. பாபு, சீத்தகாம்ப்  இராமலிங்கம், தானா தனுஷ்கோடி, வாஷி நாக்கா  முகமது சலீம், இல நாராயணன், ப. உதய குமார், முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

முரசொலி மாறன் பிறந்தநாள் விழா

22. 08. 2010.
மும்பை புறநகர் தி. மு. க. சார்பாக
முரசொலி மாறன் பிறந்தநாள் விழா
சீத்தாகேம்பில் சனிக்கிழமை நடைபெற்றது

மும்பை புறநகர் திமுக, சீத்தாகேம்ப் கிளை சார்பாக முன்னாள் மத்திய
அமைச்சர் முரசொலி மாறனின் 76 வது பிறந்த நாள் விழா கடந்த சனிக்கிழமை, (ஆகஸ்ட் 22 ) மாலை 7 மணி அளவில் சீத்தாகேம்ப் திமுக அலுவலகமான தளபதி மு. க. ஸ்டாலின் மாளிகையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மும்பை நகர திமுக செயலாளர் த. மு. பொற்கோ தலைமை தாங்கினார். மும்பை புறநகர் திமுக செயலாளர் பொ. அப்பாதுரை, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அலிசேக் மீரான், பம்பாய் திருவள்ளுவர் மன்ற பொதுச் செயலாளர் வி. தேவதாசன், . மும்பை புறநகர் திமுக துணைச் செயலாளர் பேராசிரியர் சமீரா மீரான், பொருளாளர்
பி. கிருஷ்ணன், அ. கணேசன், ஜான் சாமுவேல், டோம்பிவலி வீரை சோ. பாபு, சீத்தகேம்ப் கிளை செயலாளர் பி. எஸ். இராமலிங்கம், பொய்சர் மூர்த்தி, டி. எம். எஸ். காதர், உட்பட பலர் முரசொலி மாறனின் சிறப்புகளை நினைவு கூர்ந்து உரையாற்றினார்கள். திமுக தலைமைப் பொதுக் குழு உறுப்பினர் அமல்ராஜ் மிக்கேல், சா. பொன்னம்பலம், , திருவேங்கடம், கொளஞ்சியப்பன் , செ. மு. கான், ஆழ்வார், பெரியசாமி, காசிநாதன், தென்மொழியன் உட்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர் முன்னதாக மதியழகன் வரவேற்புரையாற்ற, இறுதியாக
வே. இராஜேந்திரன் நன்றியுரையாற்றினார் 

Tuesday, August 10, 2010

நிர்வாகக் குழுக் கூட்டம்

10. 08. 2010
மும்பைப்  புறநகர் திமுக சார்பாக

முப்பெரு விழா
நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு

மும்பை புறநகர் திமுக நிர்வாகக் குழுக் கூட்டம் கடந்த செவ்வாய் கிழமை ( ஆகஸ்ட் 10 ) மாலை 6 மணி அளவில் ஜோகேஷ்வரியில் அவைத் தலைவர் கொ. வள்ளுவன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மும்பை புறநகர் திமுக செயலாளர் பொ. அப்பாதுரை, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அலிசேக் மீரான், மும்பை புறநகர் திமுக பொருளாளர் பி. கிருஷ்ணன், துணை செயலாளர்கள் பேராசிரியர் சமீரா மீரான், வதிலை பிரதாபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மும்பை புறநகர் திமுக சார்பாக அடுத்த மாதம் முப்பெருவிழாவை மிக விமர்சையாக நடத்துவது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை புறநகர் திமுக செயலாளர் பொ. அப்பாதுரை தெரிவித்துள்ளார். மேலும் மும்பை வருகை தரவுள்ள திமுக சொத்துப் பாதுகப்பு குழு பிரதிநிதிகளை வரவேற்று
மும்பை வட்டாரத்தில் உள்ள கழக சொத்துகளை ஆய்வு செய்ய அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவது என்றும் மும்பை புறநகர் திமுக பொறுப்பில் உள்ள கோவண்டி, சீத்தாகேம்ப், ஜெரிமேரி, ஜோகேஸ்வரி, பொய்சர் ஆகிய கிளைக்கழக அலுவலக கட்டிடங்களை திமுக பொது செயலாளர் அவர்கள் பெயருக்கு மாற்றி பதிவு செய்ய ஏற்பாடு செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டதாகவும் மும்பை புறநகர் திமுக செயலாளர் பொ.  அப்பாதுரை தெரிவித்துள்ளார்.

Tuesday, June 29, 2010

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் மும்பைப் புறநகர் திமுகவினர்

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் மும்பைப்  புறநகர் திமுகவினர்

கோவையில் 2010,  ஜூன் 23 முதல் 27 வரை நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் மும்பைத்  தமிழ் பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர். மும்பைப் புறநகர் திமுக செயலாளர் பொ. அப்பாதுரை, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அலிசேக் மீரான், மும்பைப் புறநகர் திமுக அவைத் தலைவர் கொ. வள்ளுவன், மும்பைப் புறநகர் திமுக பொருளாளர் பி. கிருஷ்ணன், துணை செயலாளர் பேராசிரியர் சமீரா மீரான், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் எஸ். பி. முருகேசன், டோம்பிவலி திமுக பிரமுகர் வீரை சோ. பாபு, சீத்தகாம்ப் திமுக செயலாளர் பி. எஸ். இராமலிங்கம், அவைத் தலைவர் இல. நாராயணன், திருவேங்கடம், நேருல் சுலைமான். ஆகியோர் ஐந்து நாள் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு நேற்று மும்பை வந்து சேர்ந்தனர்.

வரலாற்று சிறப்பு மிக்க இம்மாநாட்டில் கலந்து கொண்டதை வாழ்நாளில் கிடைத்த பெரும் பேறாகக் கருதுவதாக அனைவரும் தெரிவித்தனர்.

படத்தில் - செம்மொழி மாநாட்டு வளாகத்தில் பொ. அப்பாதுரை, பேராசிரியர் சமீரா மீரான், கொ. வள்ளுவன், பி. கிருஷ்ணன், வீரை சோ பாபு, நேருல் சுலைமான் ஆகியோர்

மேலும் மும்பை தமிழ் சங்க நிர்வாகிகள் சரவணன், பரணி, ஜெரிமேரி தமிழ் சங்க தலைவர் வின்சென்ட் பால், துணை செயலாளர் இல. முருகன், உலகத் தமிழ் இலக்கிய பேரவை அமைப்பாளர் கவிஞர் அஞ்சாமை கதிரொளி, சேகர் சுப்பையா, ஆசிரியர் முத்தையா மற்றும் பல தமிழ் பிரமுகர்களும் உலகத் தமிழ் செம்ம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டனர்.





.

Sunday, June 20, 2010

பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு மலர் வெளியீட்டு விழா

பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு மலர் வெளியீட்டு விழா
பொ. அப்பாதுரை, அலிசேக் மீரான் பங்கேற்பு

மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பாக பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு மலர் வெளியீட்டு விழா தாராவியில் சந்த க்கைய தாராவி கிராஸ் ரோடில் உள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. 2010 ,
ஜூன் 19 ,  சனிக்கிழமை மாலை 7 மணி அளவில் நடை பெற்ற இவ்விழாவில் மும்பை திராவிடர் கழகத்தின் மூத்த தலைவராக விளங்கிய மறைந்த திரு தொல்காப்பியனார் அவர்களின் மனைவி திருமதி இரத்தினம் தொல்காப்பினார் அவர்கள் மலரை வெளியிட, மும்பைப் புறநகர் திமுக செயலாளர் பொ. அப்பாதுரை மலரின் முதல் படியை பெற்றுக் கொண்டார்.   தி. மு. க.  தலைமைச்  செயற்குழு  உறுப்பினர்   அலிஷேக் மீரான்,  மும்பைப் புறநகர் திமுக அவைத்தலைவர்  கொ. வள்ளுவன், மும்பைப் புறநகர் திமுக பொருளாளர்  பி. கிருஷ்ணன்,
மும்பை டி. எம். எஸ். எம். என். நரசிம்மன் ஆர். டி. ராஜன் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் மன்ற நிர்வாக குழு தலைவர் திருமதி அமலா ஸ்டான்லி தலைமை உரை ஆற்ற அம்மன்றத்தின் செயலாளர் வதிலை பிரதாபன் வரவேற்புரை ஆற்றினார். எழுத்தாளர் மன்ற நிர்வாகிகளில் ஒருவரான கவிஞர் புதிய மாதவி மலரை பற்றிய அறிமுக உரையை நிகழ்த்தினார். இறுதியாக எழுத்தாளர் மன்றத்தின் மேலாண்குழு தலைவர் பேராசிரியார் சமீரா மீரான் நன்றி கூறினார். நிகழ்சிகளை எழுத்தாளர் மன்றப் பொருளாளர் அ. ரவிச்சந்திரன் தொகுத்து வழங்கினார்.

அண்ணா நூற்றாண்டு மலர் வெளியீட்டு விழாவை ஒட்டி நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சியில் பாவேந்தர் பாரதி தாசன், பாரதியார், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவிஞர் கண்ணதாசன் ஆகியோருடைய திரையிசைப் பாடல்களை பாடகர்கள் மிக சிறப்பாக பாடினார்கள்.

Friday, June 4, 2010

கலைஞர் 87 ஆவது பிறந்தநாள் விழா படங்கள்




கலைஞர் 87 ஆவது பிறந்தநாள் விழா படங்கள்  

கலைஞர் பிறந்தநாள் விழா

03, 06, 2010
௦௦மும்பைப்  புறநகர் திமுக சார்பாக

முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா
சீத்தாகேம்பில் கோலாகலமாக நடைபெற்றது

தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு. கழகத்  தலைவருமான முத்தமிழ் அறிஞர்
டாக்டர் கலைஞர் அவர்களின் 87 வது பிறந்த நாள் விழா மும்பைப் புறநகர் திமுக சார்பாக 2010, ஜூன் 3, வியாழக் கிழமை, மாலை 7 மணியளவில் சீத்தாகேம்ப் திமுக அலுவலகமான தளபதி மு. க. ஸ்டாலின் மாளிகை கூட்ட அரங்கில் நடைபெற்றது. மும்பைப்  புறநகர் திமுக செயலாளர் பொ. அப்பாதுரை தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சீதாகேம்ப் திமுக கிளைச் செயலாளர் பி எஸ் இராமலிங்கம் தொடக்கவுரை நிகழ்த்தினார். திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் அலிசேக் மீரான், மும்பைப் புறநகர் திமுக துணைச் செயலாளர் பேராசிரியர் சமீரா மீரான், தலைமைக்  கழகப் பேச்சாளர் மேகராஜன், இலக்கிய அணிச் செயலாளர் கொ. வள்ளுவன், கவிஞர் குணா, தாராவி பால்துரை, பாண்டுப் டேவிட், டோம்பிவலி வீரை சோ. பாபு, கல்யான் வதிலை பிரதாபன், பாந்திரா பரமசிவம், கல்யான் சதானந்தன், திருவேங்கிடம், வை. நடராசன், ஷேக் சஹாபுதீன், கொளஞ்சியப்பன் உள்ளிட்ட பலர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களைப்  போற்றி, பாராட்டி உரை நிகழ்த்தினார்கள். செம்பூர் பி. கிருஷ்ணன், சயான் வளர்மணி, கோவண்டி ஜான் தாமஸ், பி. எம். சுலைமான்,காசிநாதன், எம். எ. காதர், அரசன், எம். முருகன், பாலமுருகன், ஷகீல் அஹமது உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.  இறுதியாக ப. உதயகுமார் நன்றியுரை நிகழ்த்தினார். முன்னதாக பாடகர் கான் முகம்மது திமுக கொள்கைப் பாடல்களைப் பாடினார். திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் அலிசேக் மீரான் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். .



படத்தில்: சீத்தகேம்பில் நடைபெற்ற கலைஞர் பிறந்தநாள் விழாவில்
பொ. அப்பாதுரை, அலிசேக் மீரான், சமீரா மீரான், கொ. வள்ளுவன், வதிலை பிரதாபன், பி. எஸ். ராமலிங்கம், ஷேக் சஹாபுதீன் உள்ளிட்டோர்.

Monday, March 15, 2010

தளபதி மு. க. ஸ்டாலின் நூல் அறிமுக விழா

மும்பை புறநகர் திமுக சார்பில்
தளபதி மு. க. ஸ்டாலின் நூல் அறிமுக விழா

மும்பை புறநகர் திமுக சார்பாக தமிழ்நாடு துணை முதலமைச்சரும் திமுக பொருளாளருமான தளபதி மு. க. ஸ்டாலின் அவர்களின்  பிறந்த நாள் விழாவும் எழுத்தாளர் சோலை எழுதிய 'மூத்த பத்திரிக்கையாளர் பார்வையில் ஸ்டாலின்' என்ற நூலின் அறிமுக விழாவும் 2010, மார்ச்14 , ஞாயிறு மாலை 7 மணியளவில் சீத்தாகாம்பில் உள்ள திமுக கிளைக் கழக அலுவலகமான தளபதி மு, க. ஸ்டாலின் மாளிகையில் நடைபெற்றது . மும்பைப் புறநகர் திமுக செயலாளர் பொ. அப்பாதுரை தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் அலிசேக் மீரான் நூலை வெளியிட தமிழர் நட்புறவுப் பேரவைப் புரவலர் டி. கே. சந்திரன் பெற்றுக்கொண்டார். சீதாகேம்ப் திமுக செயலாளர் பி எஸ். இராமலிங்கம் வரவற்புரையாற்ற புறநகர் திமுக துணைச் செயலாளர் பேராசிரியர் சமீரா மீரான், புறநகர் திமுக இலக்கிய அணிச் செயலாளர் கொ. வள்ளுவன், கல்யாண் திமுக செயலாளர் வதிலை பிரதாபன், தமிழர் நட்புறவு பேரவைத் தலைவர் கவிஞர் குணா, ஆரே காலணி  திமுக செயலாளர் கு. தர்மலிங்கம், மனித உரிமை இயக்கத் தலைவர் மணி, ஜே அண்ணாதுரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

செம்பூர் திமுக பொருளளர் துரை. கிருஷ்ணன், செம்பூர் திமுக செயலாளர் பி. கிருஷ்ணன், செ. அப்பாதுரை, டோம்பிவலி திமுக செயலாளர் வீரை சோ. பாபு, கல்யாண் மகேசன், ஜோகேஷ்வரி திமுக செயலாளர் டிம்லஸ், சுந்தர், அம்பர்நாத் திமுக செயலாளர் அண்ணா கதிர்வேல்,காட்கோபர் திமுக செயலாளர் ஷேக் சஹாபுதீன்,சீதாகேம்ப் ப. உதயகுமார், இராமன், என். திருப்பதி, எம். முருகன், கொளஞ்சியப்பன், ச.அரசன் உட்பட பலர் நூல் படிகளை பெற்றுகொண்டார்கள்.
இறுதியாக சீத்தா கேம்ப் திமுக அவைத்தலைவர் இல நாராயணன் நன்றி கூறினார்.

படத்தில் : மும்பை புறநகர் திமுக சார்பாக சீத்தாகாம்பில் நடைபெற்ற தளபதி மு. க. ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழாவில் எழுத்தாளர் சோலை எழுதிய 'மூத்த பத்திரிக்கையாளர் பார்வையில் ஸ்டாலின்' என்ற நூலை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அலிசேக் மீரான் வெளியிட தமிழர் நட்புறவு பேரவை புரவலர் டி. கே. சந்திரன் பெற்றுக்கொண்டார். உடன் மும்பை புறநகர் திமுக செயலாளர் பொ. அப்பாதுரை புறநகர் திமுக துணை செயலாளர் பேராசிரியர் சமீரா மீரான், புறநகர் திமுக இலக்கிய அணி செயலாளர் கொ. வள்ளுவன், செம்பூர் திமுக செயலாளர் பி. கிருஷ்ணன், தமிழர் நட்புறவு பேரவை தலைவர் கவிஞர் குணா, சீதாகேம்ப் திமுக செயலாளர் பி எஸ். இராமலிங்கம் 

Thursday, February 4, 2010

அண்ணா நினைவுநாள் கூட்டம்

மும்பை புறநகர் திமுக சார்பாக
அண்ணா நினைவுநாள் கூட்டம்

மும்பை புறநகர் திமுக சார்பாக பேரறிஞர் அண்ணா நினைவுநாள் கூட்டம் 2010 ,௦௦
பிப் 3,   புதன் கிழமை  மாலை 7 மணியளவில் ஜெரிமேரி கிளைக்  கழக  அலுவலகமான   கலைஞர் மாளிகையில் நடைபெற்றது. மும்பை புறநகர் திமுக செயலாளர் பொ. அப்பாதுரை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அலிசேக் மீரான் அனைவரையும் வரவேற்று பேசும்போது அண்ணாவை நினைவு கூர்ந்து பல செய்திகளை கூறினார். செயலாளர் அப்பாதுரை  தலைமை யுரையில்   அண்ணாவின் பண்பு நலன், அறிவாற்றல் குறித்து பேசினார். மும்பை புறநகர் திமுக துணை செயலாளர் பேராசிரியர் சமீரா மீரான், இலக்கிய அணி செயலாளர் கோ. வள்ளுவன் உட்பட புறநகர் திமுக கிளைக்கழக நிர்வாகிகள் பலர் நினைவுரை ஆற்றினார்கள். இக்கூட்டத்தில் சீத்தாகேம்ப்  பி. எஸ். ராமலிங்கம், நாராயணன், செம்பூர் கிருஷ்ணன், கல்யாண் வதிலைபிரதாபன், சதானந்தன், ஜீவானந்தன், ஜெரிமேரி கே. ராமசாமி, கவிஞர் தமிழ்நேசன், வின்சென்ட் பால், சயான் வளர்மணி, டோம்பிவலி வீரை சோ. பாபு, காட்கோபர் சஹாபுதீன், அம்பர்நாத் கதிர்வேல், தானா  தனுஷ்கோடி, முலுண்ட் அல்லாபிச்சை, காஞ்சூர்மார்க் ஜெயகுமார், ஜோகேஸ்வரி டிம்லேசன், செய்யதலி, கே. பொன்னுசாமி, ச. முருகன், பவுல்ராஜ் உட்பட தி. மு. கழகத்தினர் பலர் கலந்து கொண்டனர்.


படத்தில்:மும்பை புறநகர் திமுக சார்பாக நடைபெற்ற பேரறிஞர்  அண்ணா நினைவுநாள் கூட்டத்தில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அலிசேக் மீரான், மும்பை புறநகர் திமுக செயலாளர் அப்பாதுரை, மும்பை புறநகர் திமுக துணை செயலாளர் பேராசிரியர் சமீரா மீரான், இலக்கிய அணி செயலாளர் கோ. வள்ளுவன் ஆகியோருடன் புறநகர் திமுக கிளைக்கழக நிர்வாகிகள்

Tuesday, January 26, 2010

வீர வணக்கக் கூட்டம்

மும்பை புறநகர் திமுக சார்பாக


மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கக் கூட்டம்

ஜெரிமேரியில் நடைபெற்றது

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளுக்கு நன்றியும், மரியாதையும் செலுத்தும் வீர வணக்கக் கூட்டம் மும்பை புறநகர் திமுக ஜெரிமேரி கிளை சார்பாக  25. 01.  10  திங்கள் கிழமை காலை 11 மணியளவில் ஜெரிமேரியில் உள்ள திமுக அலுவலகமான கலைஞர் மாளிகையில் நடைபெற்றது. மூத்த திமுக பிரமுகர் கே,.இராமசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மும்பை புறநகர் திமுக செயலாளர் பொ. அப்பாதுரை வீரவணக்க உரை நிகழ்த்தினார். திமுக பிரமுகர்கள் பொன்னுசாமி, முருகன், லிங்கம், பவுல், ஜெரிமேரி பகுதி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.